சின்னத்திரை ரசிகர்கள் பெரும்பாலும் விஜய் மற்றும் சன் டிவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஏனென்றால் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்களில் அந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும்.
அந்தவகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. அதில் வழக்கம்போல் சன்டிவியின் கயல் சீரியல் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து சன்டிவியின் விருவிருப்பான வானத்தைப்போல சீரியலுக்கு இரண்டாம் இடமும், ரொமான்டிக் மற்றும் அதிரடி சீரியல் ரோஜா மூன்றாம் இடத்தையும் பெற்றிருக்கிறது.
மேலும் சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலுக்கு நான்காவது இடம் கிடைத்திருக்கிறது. இவ்வாறு முதல் 4 இடத்தை பிடித்த சன் டிவி சீரியல்களை தொடர்ந்து ஐந்தாவது இடத்தை விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியல் பெற்று விஜய் டிவி மானத்தை காப்பாற்றி இருக்கிறது.
வழக்கமாக விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்றவை டாப் 5 இடத்தை பெறும். ஆனால் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியல் மட்டுமே டிஆர்பி லிஸ்டில் இடம் பெற்றிருக்கிறது.
இவற்றைத் தொடர்ந்து சன் டிவியின் அன்பே வா, அபியும் நானும், சித்தி2, பாண்டவர் இல்லம் போன்ற சீரியல்கள் அடுத்த இடத்தைப் இடத்தைப் பெற்றிருக்கிறது. இவ்வாறு இந்த வாரத்திற்கான சன் டிவி மற்றும் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் தற்போது சின்னத்திரை ரசிகர்களிடம் அதிக கவனம் பெறுகிறது.