ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ரோஹித் சர்மா சொன்னது தப்பு.. இந்திய வீரர்களை வம்பிழுக்கும் பாகிஸ்தான்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணி கண்டெடுத்த தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அனைத்து கால கட்டத்திற்கும் ஏற்ற சிறந்த ஸ்பின் பவுலர்  அவர்தான் என்ற புகழ்ந்து கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் எடுத்து அசத்தினார் அஸ்வின். இந்த போட்டி முடிந்த பின்னர்தான் ரோகித் சர்மா இவ்வாறு கூறியுள்ளார்.

ஆனால் இதனை கேட்டவுடன் பொங்கியெழுந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான ரஷீத் லத்தீப், ரோகித் சர்மா தப்பாக பேசுகிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய மைதானத்தில் மட்டுமே நன்றாக வீசுகிறார்.

இந்திய அணியின் கபில்தேவ், அனில் கும்ப்ளே போன்றோர் வெளி மண்ணிலும் சிறப்பாக பந்து வீசுவார்கள். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளி மண்ணில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை.

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி இருந்தாலும், அவர் இதுவரை இந்திய அணிக்காக 164 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 212 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார் என்று லத்தீப் கூறியுள்ளார்

மேலும் ரஷீத் லத்தீப், ரோஹித் சர்மா வாய்தவறி இவ்வாறு கூறிவிட்டார் ஆனால் அவரைவிட தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று இந்திய அணியை வம்பிழுக்கும் விதமாக பேசியுள்ளார்.

Trending News