செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

ரஜினிக்கு தங்கச்சி ஆகும் வளரும் நடிகை.. கேரியருக்கே ஆப்பு வைக்கும் நெல்சனின் முடிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் வசூல் சாதனை படைத்ததாக சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியானது.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா போன்ற பல நடிகைகள் நடித்து இருந்தனர். அதில் ரஜினிக்கு தங்கையாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். அண்ணாத்த படம் கீர்த்தி சுரேஷுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. ஏனென்றால் தங்கச்சி சென்டிமென்ட் அந்த அளவிற்கு கீர்த்தி சுரேஷுக்கு செட்டாகவில்லை.

சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் பல படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை தவறவிட்டார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால் அண்ணாத்த படத்தில் நடித்ததால் பொன்னியின் செல்வன் படத்தை நிராகரித்துவிட்டார்.

அண்ணாத்த படம் வெளியான பிறகு கீர்த்தி சுரேஷ் காண அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் ஏண்டா அண்ணாத்த படத்தில் நடித்தோம் என்ற அளவிற்கு பல நாட்கள் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் தற்போது நெல்சன் ரஜினிகாந்த் வைத்து தலைவர் 169 படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்திற்கு தங்கச்சியாக பிரியங்கா மோகன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

அப்போது நெல்சன் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக உங்களை நடிக்க வைக்கிறேன் எனக் கூறியுள்ளார். தற்போது ரஜினிகாந்துடன் இவர் இணைந்துள்ளதால் பிரியங்கா மோகனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இந்த படத்திலும் தங்கச்சி சென்டிமேட் செட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒரு பக்கம்  தங்கச்சி கேரக்டரில் நடித்தால், அடுத்து தங்கச்சி சென்டிமென்ட் படங்களில் நடிக்க வைத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இருக்கிறார் பிரியங்கா மோகன்

- Advertisement -spot_img

Trending News