ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

தமிழ் பெண்ணை மணந்தார் கிளென் மேக்ஸ்வெல்.. மஞ்ச பத்திரிக்கையும், மோதரமுமாய் கலக்கும் தம்பதியினர்

ஆஸ்திரேலியா நாட்டு அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல். ஐபிஎல் போட்டிகளின் மூலம் இந்திய நாட்டில் நிறைய ரசிகர்களை பெற்றார். இவருக்கு ஆஸ்திரேலியாவில் ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கிளென் மேக்ஸ்வெல் இந்தியாவில் தமிழ் வம்சாவளிப் பெண்ணான ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது கல்யாணம் இந்திய முறைப்படி நடந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இவர்கள் இருவருக்கும் 2020ம் ஆண்டே நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் கொரோனா லாக்டவுன் இருந்ததால், 2 வருடங்களாக திருமணம் தள்ளிப்போனது.

கடைசியாக கிளென் மேக்ஸ்வெல், இந்தாண்டு மார்ச் மாதம் 27ம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் திருமணம் நடைபெறவுள்ளதாக முடிவு செய்யப்பட்டது என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால் தற்போது இருவருக்கும் நேற்றை திருமணம் நடந்து முடிந்தது . இருவரும் திருமண உடையில் முத்தம் கொடுக்கக்கூடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவர் 18.03.2022 திருமண நாள் என உறுதி செய்துள்ளார்.

maxwell
maxwell

ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன், அந்நாட்டில் பார்மஸி பட்டப்படிப்பை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News