நெல்சன் திலீப்குமார் மிகக்குறுகிய காலத்திலேயே பெரிய நடிகர்களின் படத்தை இயக்கி வருகிறார். இப்போது விஜய்யுடன் இணைந்து படத்தில் பணியாற்றி உள்ளார். இப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தின் ப்ரோமோ வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நெல்சன் பீஸ்ட் படத்திற்கான முக்கிய அப்டேட்டை இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தார். அதில் இப்படத்தின் டிரைலர் அல்லது டீசெர் தேதி வெளியிட இருக்கலாம். இந்நிலையில் மார்ச் 1 அல்லது 2ம் தேதி பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகும்.
இப்படத்தின் ட்ரெய்லர் பற்றி சில தகவல்கள் கசிந்துள்ளது. பீஸ்ட் படத்தின் ரிலீஸுக்கு மறுநாள் ஏப்ரல் 14ஆம் தேதி கே ஜி எஃப் 2 படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கேஜிஎஃப் படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது.
இந்த ட்ரெய்லரில் முழுவதும் ஆக்ஷன் காட்சிகளை இடம்பெற்றிருந்த நிலையில் பீஸ்ட் படத்தின் டிரைலரிலும் ஆக்ஷன் காட்சியை வெளியிட நெல்சன் திட்டமிட்டுள்ளார். இந்த டிரைலரில் விஜய் எந்த ஒரு வசனமும் பேசாமல், வெறும் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பின்னணி இசை மட்டுமே இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் கதை ஒரு பெரிய ஷாப்பிங் மால் சுற்றிய நடைபெறுகிறது.
அதுமட்டுமல்லாமல் பீஸ்ட் படம் தங்க கடத்தலை மையமாக கொண்டு உருவாகியுள்ளதால் கண்டிப்பாக இப்படத்தில் பெரிய அளவில் ஆக்ஷன் காட்சிகள் பேசப்படும் என கூறி வருகின்றன. ஏற்கனவே அஜித்தின் வலிமை படத்தில் நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் சண்டைக்காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டது. அதேபோல் பீஸ்ட் படத்திலும் எக்கச்சக்க ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது.
விஜய்க்கு சண்டைக்காட்சியும், நடனமும் கைவந்த கலை, இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லரை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். பிரம்மாண்ட படத்துடன் மோத போவதால் சற்று பீதி இருக்கத்தான் செய்யும் அந்த வகையில் நெல்சா உங்கள நம்பி தான் இருக்கிறோம் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.