சினிமாவில் பல துணிச்சலான கதைகளை எடுத்து அதில் வெற்றியும் கண்டவர் இயக்குநர் கே பாலச்சந்தர். இவரால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர்கள் ஏராளம். அந்த வகையில் ரஜினி, கமல் என்ற இரு ஜாம்பவான்கள் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.
சொல்லப்போனால் இவர்தான் அவர்கள் இருவருக்கும் குரு. இன்று சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்துடன் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள ரஜினிக்கு இவர் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருக்கிறார். இவரின் மேல் ரஜினிக்கு நிறைய மரியாதை இருக்கிறது.
அதனால்தான் ரஜினி எது செய்தாலும் அதில் பாலச்சந்தரின் அறிவுரையை ஏற்று அதன்படியே கேட்டு நடந்து கொள்வார். அவர்கள் இருவருக்கும் நல்ல ஒரு புரிதல் இருந்தது. ஆனால் கமல் இதில் சற்று மாறுபட்டவர் என்றுதான் சொல்ல வேண்டும்.
எப்படி என்றால் பாலச்சந்தர் கமலை சினிமாத்துறையில் அறிமுகப்படுத்தினாலும் சில நேரங்களில் குருவாக அவரை கமல் சில இடங்களில் விட்டுக் கொடுத்துள்ளார். ஒருமுறை கமலின் இத்தகைய வளர்ச்சி குறித்தும், பாலச்சந்தர் பற்றியும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல் நான் இப்பொழுது நடிப்பில் பிஏ முடித்துள்ளேன். பாலச்சந்தர் எனக்கு எல்கேஜியிலிருந்து நாலாம் வகுப்பு வரைதான் வாத்தியாராக இருந்தார். அதனால் அவரை இப்பொழுதும் குரு என்று சொல்ல முடியாது என அதிரடியான கருத்தை தெரிவித்தார்.
இதைக் கேட்ட பலருக்கும் ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருந்தது. இதிலிருந்து கமல் நான் என் திறமையாலும், கடின உழைப்பாலும் மட்டும்தான் இந்த அளவுக்கு முன்னேறினேன் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். நாம் என்னதான் பல டிகிரி வாங்கி இருந்தாலும் ஏபிசிடி சொல்லி கொடுத்த அந்த எல்கேஜி வாத்தியார் நமக்கு எப்பவும் ஸ்பெஷல் தானே. இந்த விஷயம் உலக நாயகனுக்கு தெரியாமலா இருக்கும்.