ட்ரெய்லரில் உள்ள தவறை கண்டுபிடித்த அஜித் ரசிகர்கள்.. பீஸ்ட் படத்தில் கோட்டைவிட்ட நெல்சன்

ஒரு நடிகரின் படம் வெளியாகும் போது அதிலுள்ள குறைகளை குறி வைத்து சமூகவலைத்தளங்களில் போஸ்ட்டுகள் வெளியிடுவது மற்றோரு நடிகரின் ரசிகனின் வேலையாகவே தற்போது ஆகிவிட்டது. அது ஆரோக்கியமான விஷயம் இல்லையென்றாலும் அது தொடர்வதை யாராலும் தடுக்க முடியவில்லை.

இந்த சூழலில் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாகும். விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் முதல் டிரெய்லர் இணையத்தில் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாட வருகின்றன.

டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளபடி, கிறிஸ்துமஸ் நேரத்தில் ஒரு மால் ஒன்றை பயங்கரவாதிகள் கைப்பற்றி பார்வையாளர்களை பணயக்கைதிகளாக வைத்துள்ளனர். உளவுத்துறையும், அதிகாரமும் ஒரு திட்டத்தைச் செய்யத் தொடங்கும் போது, அவர்களின் சொந்த இராணுவ வீரர் வணிக வளாகத்திற்குள் இருப்பதாகவும், பணயக்கைதிகளில் ஒருவர் என்றும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

எதற்கும் அஞ்சாத இந்த ‘ஒல்லியான மற்றும் சராசரி’ உருவமாக விஜய்யின் வேடத்தில் உளவாளி வீர ராகவன் அறிமுகமாகிறார். அவர் மத்திய கிழக்கில் முழு இராணுவத்தையும் எதிர்த்துப் போராடியவராகவும், துப்பாக்கிகள் முதல் போர் விமானங்கள் வரை அனைத்து வகையான ஆயுதங்களையும் பயன்படுத்தியவராகவும் காட்டப்படுகிறார்.

விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த டிரெய்லரில் ஒரு சொதப்பலை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். டிரெயிலரில் இடம்பெறும் ஒரு சண்டை காட்சியில், முதல் ஷாட்டில் சாதாரண ஷு அணிந்துள்ள விஜய், அடுத்த ஷாட்டில் ஸ்கேட்டிங் ஷுவுடன் உள்ளார். படத்தில் இதனை நெல்சன் கோட்டை விட்டுவிட்டாரே என அஜித் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இது தவறுதலாக இடம் பெற்றதா? இல்லை காட்சியில் எதேனும் உண்டா? என்பது படம் வெளியான பிறகு தெரிந்துவிடும். சமீபத்தில் வெளியான வலிமை படத்தின் கதை மெட்ரோ திரைப்படத்தின் கதை திருட்டு, அதை முதலில் கவனியுங்கள் என இதற்கு விஜய் ரசிகர்கள் பதில் பதிவு செய்து வருகின்றனர்.