கமல் அரசியலில் படு பிசியாக களமிறங்கினார். அது போக அந்த பிஸியான நேரத்திலும் கூட பிக் பாஸ்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விஜய் டிவியில் இவர் நடத்திய பிக்பாஸ் சக்கைபோடு போட்டது. அதன்பின் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இப்பொழுது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் நடிப்பில் தற்போது விக்ரம் படம் ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதுபோக தொடர்ந்து பல புதுமுக இயக்குனர்களிடம் கமல் கதை கேட்டு வருகிறார். தற்போது இவர் தனது ராஜ்கமல் பிலிம்ஸில் மீண்டும் பல படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இப்பொழுது தனது நிறுவனத்தின் மூலம் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் மீண்டும் ராஜ்கமல் பிலிம்ஸ் படு பிசியாக இறங்குவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. கமல் அரசியலுக்காக நிறைய இடத்தில் கடன் வாங்கி, கட்சியை தொடங்கி பெருத்த அடி வாங்கி உள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஏற்கனவே நிறைய கடனிலும் இருந்துள்ளார்.
இப்பொழுது கமலை பல ஓடிடி நிறுவனங்கள் அணுகுகின்றன. அவரும் அரசியலில் அந்த அளவிற்கு ஜொலிக்கவில்லை அதனால் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார். இப்பொழுது ஓடிடி நிறுவனங்களுக்காக நிறைய படங்கள் நடிக்கவிருக்கிறார்.
ஓடிடி நிறுவனங்கள் இவரை நாடி வருவதால் பணத்திற்கு பிரச்சனை இருக்காது. அதனால் நிறைய படங்களில் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணலாம் என்ற ஒரு பெரிய ஐடியாவில் இருக்கிறார் கமல். அதுமட்டுமின்றி, அவர் அரசியலில் முதல்வராக இருப்பதை விட, சினிமாவில் முதல்வராக இருப்பதை தான் மக்கள் விரும்புகின்றனர்.
இப்படி கமல் அதிக படங்களை தயாரிப்பதன் மூலம் அவர் வாங்கிய கடனில் இருந்து எளிதாக விடுபடலாம். தற்போது அரசியலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்று முழு நேரமாக படத்தில் நடிப்பது என்பதில் கமல் உறுதியாக இருக்கிறார். ஆனால் கமல் இதை முன்பே செய்து இருக்கலாம். அரசியல் ஆசை வந்து அனைத்தையும் இழந்து தற்போது மீண்டும் பழைய திசைக்கு திரும்புகிறார் கமல்.