தன்னை வைத்து முன்னர் இயக்கி வெற்றி படம் கொடுத்த இயக்குனருக்கு நடிகர்கள் மீண்டும் அவர்கள் துவண்டு போய் இருக்கும் நேரத்தில் உதவுவது பெரும்பாலும் சினிமாவில் நடக்கும் செயலே. அதற்கு எடுத்துக்காட்டாக பல நடிகர் இயக்குனர் உள்ளனர்.
2012ஆம் ஆண்டு நடிகர் சிம்புவின் போடா போடி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். காமெடி பின்னணியில் உருவான இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் அப்பொழுது வெளியான விஜய்யின் துப்பாக்கியுடன் வெளியாகி வர்த்தக ரீதியாக வெற்றி பெறாமல் போனது. அதன் பின் விக்னேஷ் சிவன் பல நடிகர்களுக்கு கதை கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் 3 ஆண்டுகள் கழித்து, நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு கதை கூறியுள்ளார். அவருக்கும் அந்த கதை புடித்து போக விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி என பலர் நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நானும் ரவுடி தான் திரைப்படம். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகும் நல்ல வெற்றியை பெற்றது இந்த படம்.
அதில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் மீது அவ்வபோது ஒரு குற்றசாட்டு வைக்கப்படுகிறது. அவர் தனக்கு கதை கூற வரும் அனைவரின் படங்களையும் சரி என கூறி நடித்து வருகிறார். அவரின் ஒரு படம் வெற்றி அடைந்தால் 3 படங்கள் தோல்வியை அடைகின்றன எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்னும் படம் பண்ணியுள்ள விக்னேஷ் சிவன், அந்த குற்றசாட்டிற்று பதில் அளித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும் போது, நான் முதல் முதலில் விஜய் சேதுபதியிடம் கதை கூற சென்ற போது கதை சொல்லிய பின், கதை நல்லா இல்லனா சொல்லிடுங்க என சொன்னதற்கு, நான் படம் பண்றேன்டா, இன்னும் எவளோ நாளுக்கு தான் நீயும் தயாரிப்பாளர் தேடி அலைவ’னு விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
தற்போது இந்த விஷயம் அறிந்த ரசிகர்கள் சேதுபதியின் நல்ல மனசை பாராட்டி வருகின்றனர். அவரின் நல்ல குணத்தால் அவரின் கேரியர் பாழாகி விட கூடாது எனவும் விரும்புகின்றனர்.