கைமாறும் விக்ரம் படம்.. கமலுக்கே விபூதி அடித்த தயாரிப்பு நிறுவனம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். பல போராட்டங்களுக்குப் பிறகு தற்போது விக்ரம் படம் ஒருவழியாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

விக்ரம் படத்தின் ரிலீஸ் உரிமையை முதலில் மதுரை பைனான்சியர் அன்புச்செல்வன் பெற்றார். ஆனால் தற்போது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கமலை நாடி இந்த படத்தின் உரிமையை எங்களுக்கு கொடுங்கள் என கேட்டுள்ளது.

சமீபகாலமாக உதயநிதி ஸ்டாலின் பெரிய நடிகர்களின் படங்களை விநியோகித்து வருகிறார். இந்நிலையில் விஜயின் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் உரிமையையும் பெற்றுள்ளார். இதனால் பல தயாரிப்பாளர்களும் இந்த நிறுவனத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் விக்ரம் படத்திற்காக மதுரை அன்புச்செல்வன் இடம் கமலஹாசன் 34 கோடிகளுக்கு பேசியுள்ளதாக கூறியுள்ளார். இப்பொழுது ரெட் ஜெயின்ட் நிறுவனம் மதுரை அன்புவிடம் பேசி கமலின் விக்ரம் பட உரிமைகளையும் கைப்பற்றியிருக்கிறது.

அதேபோல் இதற்கு முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல 2 காதல் படத்தை இப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் ஒடிடியில் வெளியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத் இருவரும் படம் நன்றாக வந்திருக்க திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என கட்டாயப்படுத்தினார்கள்.

அதனால் காத்துவாக்குல 2 காதல் படத்தின் ரிலீஸ் உரிமையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது. இதேபோல் ஜிவி பிரகாஷ், கவுதம் மேனன் நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளிவந்த செல்ஃபி படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியிருந்தது. இவ்வாறு ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சினிமாவில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.