சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்தடுத்த பட வெற்றியால் தற்போது மிகப்பெரிய உயரத்தை அடைந்து உள்ளார். அதுவும் டாக்டர் படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் அதிகரித்துள்ளது. தற்போது டான், அயலான் போன்ற படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
மேலும், தெலுங்கு படமொன்றிலும் சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது எனக்கு சம்பளம் பாக்கி இருக்கிறது என சிவகார்த்திகேயன் வழக்கு போட்டுள்ளார்.
ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இவர் மிஸ்டர் லோக்கல் படத்தின் மூலம் தனக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக சிவகார்த்திகேயன் மீது குற்றம் வைக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன் தனக்கு 15 கோடி சம்பளத்தில் நான்கு கோடி பாக்கி இருக்கிறது என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மிஸ்டர் லோக்கல் படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் இவ்வளவு நாள் கழித்து இப்போது இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் வழக்கு போட்டுதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. பொதுவாக படங்களில் நடிப்பதற்கு ஹீரோக்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது டிடிஎஸ் எனப்படும் வரியைப் பிடித்துக் கொண்டு மீதமுள்ள பணத்தை தயாரிப்பாளர்கள் கொடுக்கிறார்கள்.
ஏனென்றால் அந்த பணத்தை தயாரிப்பாளர்கள் வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டும். அவ்வாறு மிஸ்டர் லோக்கல் படத்திற்காக வரியை இன்னும் ஞானவேல்ராஜா செலுத்தவில்லையாம். இதனால் சிவகார்த்திகேயன் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் அந்த நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் மிகுந்த கோபத்தில் இருந்த சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது புகார் கொடுத்துள்ளார். மேலும் இந்த தயாரிப்பாளர் மீது பலர் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சினிமா வட்டாரத்தில் பெரும்புள்ளியான ஒருவர் சிவகார்த்திகேயனை தூண்டி விட்டதாக கூறப்படுகிறது.