திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மனஉறுதியோடு எதிர்த்து போராடும் போட்டியாளர்.. இறுதி கட்ட பரபரப்பிலும் நம்பர் ஒன் ட்ரெண்டிங்

நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கியிருக்கிறது. இதனால் போட்டியாளர்களுக்கு நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் அத்தனை டாஸ்க்குளும் மிகவும் கடுமையாக இருக்கிறது. ஆனாலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அனைவரும் போட்டி போட்டு வருகின்றனர்.

மேலும் போட்டியாளர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வந்து இருக்கின்றனர். அதில் அனிதாவின் வரவு போட்டியாளர்களுக்கு இடையே சிறு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சில நாட்களுக்கு முன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அனிதா ஓட்டு போட்ட மக்களை குறை கூறிக்கொண்டே இருந்தார். அவர் பாலாவுடன் சண்டையிட்டதால் தான் வெளியேற்றபட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்தார். தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த போதும் அவர் தன் மீது தவறு இல்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் பாலாவுக்கு எதிராகவும் சக போட்டியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதுவரை பிக் பாஸ் வீட்டில் பாலாவுக்கு நிகழ்ந்த அனைத்து சோகங்களையும் ஒரு வீடியோவாக வெளியிட்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அதனால் பாலாஜி முருகதாஸ் தற்போது ட்விட்டரில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறார். பாலாவை எதிர்க்கும் வனிதா, ரம்யா பாண்டியன் வரிசையில் தற்போது மற்றொரு கோமாளியாக அனிதாவும் சேர்ந்துள்ளார். இதை குறிப்பிடும் ரசிகர்கள் பாலா தான் இந்த இந்தப் போட்டியில் வெற்றி பெறுவார் என்று தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் வாக்குப்பதிவில் மற்ற போட்டியாளர்களை விட பாலா தான் முன்னிலையில் இருந்து வருகிறார். அந்த வகையில் ரசிகர்களின் பேராதரவோடு இந்த டைட்டிலை அவர் நிச்சயம் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு வகையில் அவருடைய மன உறுதிக்கும், உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாக இருக்கும்.

Trending News