ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பழைய ஹிட் பட தலைப்பை ஆட்டையை போட்ட 5 ஹீரோக்கள்.. கமல் டைட்டிலை காப்பியடித்த வெங்கட்பிரபு

சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பது தற்போது வழக்கமாக உள்ளது. அதேபோல் பழைய படங்களின் தலைப்புகளை தற்போது பெரிய ஹீரோக்கள் தங்களது படங்களின் டைட்டில்களாகாக வைக்கிறார்கள். அவ்வாறு இந்த ஆண்டு பழைய டைட்டில்கள் வைத்து ரிலீசான மற்றும் ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களை பார்க்கலாம்.

மாறன் : சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாறன். இதே டைட்டிலுடன் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு தனுஷின் மாறன் வெளியாகியுள்ளது. மாறன் படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் வெளியானது. ஆனால் மாறன் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறாமல் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

எதற்கும் துணிந்தவன் : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. இதே தலைப்புடன் 1976 இல் அசோகன், பண்டரிபாய், கேஸ் ஜெயலட்சுமி, ஆச்சி மனோரமா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகியிருந்தது.

மன்மத லீலை : கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1976ம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மதலீலை. இதே டைட்டிலிலேயே தற்போது கையில் எடுத்துள்ளார் இயக்குனர் வெங்கட்பிரபு. மன்மதலீலை இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் அடல்ட் மூவியாக வெளியாகயுள்ளது.

விக்ரம் : கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விக்ரம். இதே தலைப்பில் 1986இல் உலகநாயகன் கமலஹாசன் நடித்துள்ளார். ஆனால் தற்போது உருவாகியுள்ள விக்ரம் படம் இப்படத்தின் தொடர்ச்சி இல்லை என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

பொன்னியின் செல்வன் : ராதாமோகன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, கோபிகா, ரேவதி மற்றும் பலர் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். தற்போது மணிரத்னம் வரலாற்று காவிய கதையான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Trending News