தலைவிரித்து ஆடும் பான் இந்தியா கலாச்சாரம்.. இதுவரை இல்லாத கார்த்தி படத்திற்கு கிடைத்த மவுஸ்

தற்போது தமிழ் சினிமாவில் உருவாகும் பெரும்பாலான படங்கள் பான் இந்திய படமாக வெளியாகிறது. ஏனென்றால் முன்னணி நடிகர்களின் படங்களை பான் இந்திய படமாக தயாரித்து எல்லா மொழிகளிலும் ரிலீஸ் செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என நினைக்கிறார்கள்.

இதற்காகவே எல்லா மொழிகளிலும் பரிச்சயமான சிலரை தேர்வு செய்து பான் இந்திய படங்களில் நடிக்க வைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக சத்யராஜ் மற்றும் நாசர் இருவரும் எல்லா மொழி ரசிகர்களிடையே நன்கு அறியப்படுபவர்கள். பெரும்பாலான படங்களில் இவர்களையே தேர்வு செய்கிறார்கள்.

இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படமும் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகயுள்ளது. இதற்கு முன்னதாக வெளியான அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படங்களும் பான் இந்திய படமாக வெளியாகியிருந்தது. இதனால் முன்னணி ஹீரோக்கள் மற்ற மொழி ரசிகர்களையும் கவர முடிகிறது.

இந்நிலையில் ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள படமும் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. இப்படத்திலும் எல்லா மொழியிலும் பரிச்சயமான ஒருவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை கார்த்தி படங்களில் இல்லாத அளவிற்கு இது ஒரு வித்தியாசமான படமாக அமைகிறது. மேலும் இப்படம் எல்லா மாநிலத்தையும் கவர் செய்யும் ஒரு கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதுவரை கார்த்தி படங்களில் இல்லாத மவுஸ் இந்த படத்திற்கு இருக்கிறதாம். ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் வசூலில் வேட்டையாடியது. இந்நிலையில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகயுள்ளது.