சைடு கேப்பில் நெல்சனை கலாய்த்த விஜய்.. எம்மதமும் சம்மதமா.?

நேற்று சன் டிவியில் நடிகர் விஜய் பங்குபெற்ற நேருக்கு நேர் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு விஜய் தன்னுடைய ரசிகர்களுக்காக இந்த பேட்டியை அளித்துள்ளார். இதில் இயக்குனர் நெல்சன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விஜய் தன்னுடைய ஸ்டைலில் பதிலளித்தார்.

முதலில் நெல்சன் விஜய் பத்து வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு பேட்டி அளிப்பது குறித்து கேள்வி கேட்டார். அதற்கு விஜய் என்னுடைய பட விழாவின்போது மேடையில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்று கூறி ஆரம்பிப்பேன். அப்படி என் ரசிகர்களை பற்றி பேசும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

மேலும் கடந்த பத்து வருடங்களாக நான் மீடியாவுக்கு எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை. இதைப்பற்றி அனைவருமே என்னிடம் கேட்டனர். அதனால் தான் சரி இப்போது பேட்டி கொடுத்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் பத்து வருடம் கழித்து நீ வந்து பேட்டி எடுப்பாய் என்று நான் நினைக்கவில்லை என விஜய் நெல்சனை கலாய்த்தார்.

அதையடுத்து நெல்சன் பீஸ்ட் திரைப்படம் எப்படி வந்திருக்கிறது என்று கேட்டார். இதற்கு விஜய் வேறுவிதமாக பதிலளிப்பார் என்று எதிர்பார்த்த நெல்சனுக்கு பல்பு தான் கிடைத்தது. ஏனென்றால் விஜய் அந்த கேள்விக்கு யாருக்குத் தெரியும் படத்தை தியேட்டரில் பார்த்தால் தான் தெரியும் என்று அசால்டாக கூறினார்.

இதனால் அதிர்ந்த நெல்சன் இந்த திரைப்படத்தில் நடித்தவர்களை பற்றியாவது கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு விஜய் இயக்குனர் நெல்சன் மிகவும் தெளிவான மனிதர் என்றும், நான் பார்த்த திறமையான இயக்குனர்களில் நீங்களும் ஒருவர் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் ஜோடி தன் நண்பர்களுக்கு மிகவும் பிடித்தது என்றும் அனிருத்தின் இசை படத்திற்கு ப்ளஸ் பாயின்ட் என்றும் தெரிவித்தார். அதை தொடர்ந்து நெல்சன் விஜய்யின் மத நம்பிக்கை பற்றி கேள்வி கேட்டார்.

அதற்கு விஜய் எனக்கு எல்லா மதமும் ஒன்று தான். நான் சர்ச்சுக்கு செல்லும் போது எனக்கு ஒரு பாசிட்டிவ் எண்ணம் தோன்றும். அதே போல் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலுக்கும், திருநள்ளாறு கோவிலுக்கும் நான் சென்றிருக்கிறேன். மேலும் கத்தி திரைப்படத்தின் போது ஒரு மசூதிக்கும் சென்றேன். எங்கு சென்றாலும் ஒரே மாதிரியான பாசிட்டிவ் எண்ணம் தான் எனக்கு கிடைக்கிறது.

என் அப்பா கிறிஸ்தவர் அம்மா இந்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் ஒரு போதும் நீ இங்கு தான் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியது கிடையாது. அதையே தான் நான் என் பிள்ளைகளுக்கும் கூறுகிறேன் என்று விஜய் தன்னை பற்றியும், பீஸ்ட் திரைப்படம் குறித்தும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.