தளபதி விஜய்யை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது அவருடைய தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் தான். ஆரம்பத்தில் இவர் தனது மகனை வைத்தே பல படங்கள் இயக்கினார். இந்நிலையில் சமீபத்தில் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இது செய்தி சமூக வலைதளங்களில் பூதாகரமாக வெடித்தது. அதன்பிறகு எஸ் ஏ சந்திரசேகர் ஒரு பட வெளியீட்டு விழாவில் பேசும்போது விஜய்க்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான் என கூறினார். இந்நிலையில் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் நெல்சன் உடன் சன் டிவிக்கு விஜய் பேட்டி கொடுத்திருந்தார். அதில் ரசிகர்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை நெல்சன் விஜயிடம் கேட்டு இருந்தார். சந்திரசேகரை பல பேட்டிகளில் காணமுடிகிறது. ஆனால் விஜய் பத்து வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் பேட்டி கொடுத்துள்ளார்.
அதனால் இதைப் பயன்படுத்திக் கொண்ட நெல்சன் அம்மா, அப்பா உறவுகள் எப்படி இருக்க வேண்டும், அதை பற்றி உங்கள் கருத்து என்ன என சாதுரியமாக கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய், அப்பா ஒவ்வொரு குடும்பத்திற்கும் மரத்தோட வேர் மாதிரி. அப்பாவுக்கும் கடவுளுக்கும் ஒரே வித்தியாசம்தான். கடவுளே நாம பார்க்க முடியாது.
அப்பாவைப் பார்க்க முடியும், அதுதான் வித்தியாசம் எனக் கூறி அனைவரையும் ஆச்சரியம் அடையும் செய்தார். தனது தந்தையுடன் விஜய் கருத்து வேறு காரணமாக பேசுவதில்லை என சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சும் உலாவியது. மேலும் விஜய்யின் அம்மா மட்டும் தான் அவர் வீட்டுக்கு சென்று வருகிறார் எனவும் கூறப்பட்டது.
ஆனால் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் விஜய் தனது தந்தையை விட்டுக்கொடுக்காமல் இப்படிப் சொன்னது அனைவரையும் நெகிழவைத்தது. இதனால் அவர்களுக்குள் உள்ள மனக்கசப்பு தற்போது இல்லை எனவும் எப்போதும்போல அப்பா, மகன் இருவரும் நல்லபடியாக தான் பேசுகிறார்கள் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.