இவரை வெல்ல இந்திய சினிமாவில் புதுசா ஒருவர் பொறக்கணும்.. பேட்டியிலேயே புல்லரித்த வினய்

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் வினய். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதற்கு முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்திருந்தார்.

ஆரம்பத்தில் வினய் ஹீரோவாக நடித்து வந்த போது தன்னுடைய படங்களுக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், தன்னுடைய உடல்வாகு மற்றும் தோற்றம் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உள்ளதால் தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் வினய் தன் வாழ்க்கையில் கமலஹாசன் மட்டும்தான் உதாரணமாக உள்ளார் என கூறியுள்ளார். உலகநாயகன் கமலஹாசனை திரையில் பார்க்க போது ஒவ்வொரு சீனிலும் அசத்தியிருப்பார். அந்த அளவுக்கு இந்த மனுஷனுடைய நடிப்பு தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார்.

மேலும் இந்திய சினிமா மட்டும் அல்லாது, உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் கமலஹாசன். என்னுடைய ஃபேவரிட் நடிகரான கமலஹாசனின் திறமைக்கு அவர்கிட்ட யாரும் நெருங்க கூட முடியாது. அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவரோட படங்களை பார்த்தாலே போதும் அவர் எவ்வளவு பெரிய திறமைசாலியான நடிகன் என்பது தெரியும் என கூறினார். இவரை வெல்ல இந்திய சினிமாவில் இன்னொருவர் பொறந்து தான் வரணும் என்றும் புல்லரித்தார்

வினய் கூறுகையில் எனக்கு கமலஹாசன் போல் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. மற்ற நடிகர்கள் போல வெற்றி படங்களை கொடுக்காமல் சினிமாவில் சில வித்தியாசமான படைப்புகளை கமலஹாசன் எப்போதும் கொடுக்க வேண்டும் என வினய் கூறியுள்ளார்.

உலகநாயகன் கமலஹாசன் பல இளம் நடிகர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளார். மேலும் சினிமாவுக்காக பல அர்ப்பணிப்புகளை செய்துள்ளார். அவரைப் பார்த்து பல நடிகர்கள் சினிமாவிற்கு வந்துள்ள நிலையில் வினய்யும் தனக்கு எடுத்துக்காட்டாக கமலஹாசன் இருந்தார் என்று சொல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.