புருஷன் பொண்டாட்டி பஞ்சாயத்தில் சிக்கிய ஆண்டவர்.. மனைவியின் மாஸ்டர் பிளானால் தவிக்கும் தாடி பாலாஜி

விஜய் டிவியின் மூலம் பிரபலமாக இருக்கும் நடிகர் தாடி பாலாஜி தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் தன்னுடைய மனைவி குறித்து பேசிய பேச்சு சில எதிர்வினைகளை அவருக்கு கொடுத்தது.

அவரின் அத்தகைய பேச்சுக்கு தாடி பாலாஜியின் மனைவி நித்யா தன்னுடைய மகளுடன் சோஷியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தார். ஏற்கனவே இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு சர்ச்சையை ஏற்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து நித்யா தன் கணவரை விட்டு பிரிந்து தனிமையில் தன் மகளுடன் வசித்து வருகிறார். விவாகரத்தான சமயத்தில் அவர் தன் கணவர் குடித்துவிட்டு தன்னையும் தன் மகளையும் எப்படி கொடுமைப்படுத்தினார் என்பதை பற்றியெல்லாம் விளாவாரியாக பேசினார்.

மேலும் கணவர் இல்லாமல் தன்னால் வாழ்ந்து காட்ட முடியும் என்றெல்லாம் வீர வசனம் பேசினார். இவ்வளவு பேசி விட்டு தற்போது தாடி பாலாஜியிடம் இருந்து தனக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வேண்டும் என்று நித்யா மீண்டும் ஒரு பிரச்சினையை கிளப்பி இருக்கிறார்.

அவருக்கு நெருக்கமாக இருக்கும் ஒருவர் தான் பக்காவாக பிளான் போட்டு நித்யாவை மறைமுகமாக இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நித்யா தற்போது அவர்களின் குடும்ப விஷயத்தில் நடிகர் கமலையும் இழுத்து கண்டபடி பேசி வருகிறார். இதுவும் அந்த நபரின் வேலை தான் என்றும் கூறப்படுகிறது.

அப்படி பேசினால் தான் தாடி பாலாஜி பயந்துகொண்டு பணத்தை அள்ளிக் கொடுத்து விடுவார் என்றும் அவர்கள் திட்டம் தீட்டி உள்ளனர். ஆனாலும் தாடி பாலாஜி இந்த விவகாரத்தில் உடனே எந்த முடிவும் எடுக்கும் நிலையில் இல்லை. ஏனென்றால் இப்போதெல்லாம் நித்யா தன் மகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் நடந்து கொள்கிறார்.

சமீபகாலமாக அவர் யூடியுப் வீடியோவில் மகளை தந்தையைப் பற்றி பேச வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இது பலரின் விமர்சனத்திற்கும் ஆளாகி வருகிறது. அப்படி தங்களைப் பற்றி பேசுபவர்களை எல்லாம் அவர் மிக கடுமையாக சாடி வருகிறார்.

இதனால் தாடி பாலாஜி தன்னுடைய மகளின் எதிர்கால வாழ்வை நினைத்து கவலையில் இருக்கிறார். மேலும் குழந்தைக்காகவாவது இவர்கள் இணைந்து வாழவேண்டும் என்று நினைத்துதான் கமல் இந்த விஷயத்தில் பஞ்சாயத்து செய்தார். அப்படியிருக்கும் போது அவரைப் பற்றியே நித்யா தரக்குறைவாக பேசுவது அவருக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

இதனால் கமல் தாடி பாலாஜியிடம் கூடிய விரைவில் இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தாடி பாலாஜி எந்த மாதிரியான முடிவு எடுப்பார் என்று சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.