செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

விஷால் போல் சபதம் எடுத்த சிம்பு.. அப்போ ஸ்ட்ரைட்டா அறுபதாம் கல்யாணம் தான் பாஸ்

நடிகர் விஷால் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு சமீபகாலமாக ஏற்பட்டுள்ள ஒற்றை தலை வலி பிரச்சனையால் இந்த படத்தில் சரிவர கலந்து கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படங்களும் தாமதமாகி வருகிறது.

நாற்பது வயதை கடந்தும் சிங்கிளாக சுற்றி கொண்டிருக்கும் அவருக்கு எப்போது திருமணமாகும் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அவரோ ஏற்கனவே போட்ட ஒரு பெரிய சபதத்தின் காரணமாக இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

என்னவென்றால் விஷால் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சங்க கட்டடம் எப்போது முடிகிறதோ அங்குதான் என்னுடைய திருமணமும் நடக்கும் என்று ஒரே போடாக போட்டார். தற்போது நடிகர் சங்க கட்டிடமும் கட்டி முடித்த பாடில்லை இவருக்கு திருமணம் பண்ண முடியவில்லை.

இதைப் பார்த்த ரசிகர்கள் சபதம் போடுவதற்கு ஒரு வயசு வேண்டாமா என்று அவரை கலாய்த்து வருகின்றனர். இப்போது இவரைப்போலவே நடிகர் சிம்புவும் சபதம் போடாத குறையாக ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் இன்னும் திருமணம் ஆகாமல் சுற்றிக்கொண்டிருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

இவருடைய தம்பி தங்கை என அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. ஆனால் இவரோ இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். அவருடைய பெற்றோர்களும் அவருக்கு திருமணம் செய்ய எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

தற்போது சிம்பு ஒரு மிகப்பெரிய ஆசையில் இருக்கிறார். அதாவது விஜய் மற்றும் முன்னணி நடிகர்களை போல இவரும் ஈசிஆரில் ஒரு பிரமாண்டமான பங்களாவை கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தன்னுடைய ஆசை நிறைவேறிய பின்பு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவிலும் அவர் இருக்கிறார்.

ஏற்கனவே சிம்புவுக்கு வயது ஏறிக்கொண்டே போகிறது. இந்நிலையில் பிரம்மாண்ட பங்களா கட்ட வேண்டும் என்றால் குறைந்தது 3 முதல் 4 வருடங்கள் ஆகும். அப்படி பார்த்தால் அவர் நேராக அறுபதாம் கல்யாணம் தான் செய்ய வேண்டும் என்று இதைக் கேள்விப்பட்ட பலரும் கலாய்த்து வருகின்றனர்.

Trending News