வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பீஸ்ட் படத்தை சரிவிலிருந்து காப்பாற்றிய 3 பேர்.. தளபதியை மட்டும் வச்சு செய்த நெல்சன்

விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் இன்று ரிலீசானது. இதனிடையே இத்திரைப்படத்தின் ஓரளவு சரிவிலிருந்து மீட்ட  மூன்று பேர் இருக்கின்றனர் ஒரு சில விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் யார் என்பதை குறித்து தற்போது பார்க்கலாம்.

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே,செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் நீண்டநாள் எதிர்பார்ப்பிற்கு பின்னர் திரையரங்குகளில் இன்று ரிலீஸ் ஆனது. அனிருத் இசையில் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகளுடன் இத்திரைப்படத்தை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் ஒரு சில இடங்களில் பெட்ரோல் உள்ளிட்டவற்றை வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லரில் நடிகர் யோகி பாபு நடித்த கூர்க்கா திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் போலவே பீஸ்டிலும் இடம்பெற்றுள்ளது என நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். இது குறித்து பேசிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படம் கூர்கா படம் அல்ல அது நாற்பது படங்களின் காப்பி தான் பதிலடி கொடுத்தார்.

இதனிடையே இத்திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்கள் படத்தை முடித்துவிட்டு பல விமர்சனங்களை வைக்கின்றனர். காமெடி ஆக்ஷன் உள்ளிட்டவை நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும் நிலையில் விஜய்க்கு தகுந்த படம் பீஸ்ட் இல்லை என்று சிலர் கூறி வருகின்றனர். 2 பாடல்களில் மட்டுமே குத்தாட்டம் போட்ட பூஜா ஹெக்டே படத்தில் கிளாமராக நடித்துள்ளார்.

இதனிடையே இப்படத்தில் நடித்த யோகி பாபு, விடிவி கணேஷ் செல்வராகவன் உள்ளிட்டோரின் நடிப்பு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கதாபாத்திரங்களாக மாறியிருக்கிறது மால் ஒன்றை ஹைஜாக் செய்த தீவிரவாதிகளிடமிருந்து மக்களை காப்பாற்றும் விதமாக வீரராகவன் கதாபாத்திரத்தில் ரா ஏஜென்டாக நடிகர் விஜய் நடித்துள்ளார். இவருடன் இயக்குனர் மற்றும் நடிகர் செல்வராகவன் போலீசாக இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

செல்வராகவனின் டயலாக்குகள் ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டப்பட்டு உள்ளது. முதல்முறையாக நடிகராக களம் இறங்கிய செல்வராகவனுக்கு இத்திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பு கொடுத்துள்ளது. இயக்குவதை விட நடிப்பது கடினம் என தெரிவித்த செல்வராகவன் தற்போது தன்னுடைய நடிப்புத் திறமையை ரசிகர்களிடம் காட்டி உள்ளார் என்பதே உண்மை. அடுத்ததாக நடிகர் யோகிபாபு தன்னுடைய இயல்பான காமெடியை இத்திரைப்படத்தில் காண்பித்துள்ளார். கூடுதலாக விஜய்யுடன் அவர் பேசும் காட்சிகள் நகைச்சுவையாகவே உள்ளது.

யோகிபாபு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்திலும் யோகி பாபுவின் காமெடி நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விடிவி கணேஷ் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யுடன் முதல்முறையாக நடித்துள்ளார். தன்னுடைய இயல்பான பேச்சாலும் தனக்கு சொந்தமான பிரத்யேக குரலாலும் நடித்த விடிவி கணேஷ், இத்திரைப்படத்தில் செக்யூரிட்டி ஆபீஸர்களை வேலைக்கு ஆள் எடுக்கும் ஏஜென்டாக உலாவருகிறார்.

இவருடைய டயலாக்குகளும் காமெடியும் திரைப்படத்தின் கூடுதல் மாசாக அமைந்தது. இத்தனை நாள் கழித்து பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் நடிகர் விஜயின் தோற்றம் இத்திரைப்படத்தில் அற்புதமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். திரைப்படம் உண்மையாகவே மாஸான ஆக்ஷன் காட்சிகளுடன் விஜய்யின் தெறிக்கவிடும் டயலாக்குகள் ரசிகர்களை ஆரவாரப்படுத்தியுள்ளது. நெல்சன் திரைக்கதையில் சில சொதப்பல்கள் செய்துள்ளார், அதுமட்டுமில்லாமல் தளபதியை வச்சு செய்துவிட்டார் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Trending News