வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கமலுக்கு கல்தா கொடுத்த ஆர்யா.. ஆரம்பிக்கும் முன்னரே மனக்கசப்பால் பறிபோன பட வாய்ப்பு

கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றிருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் வரும் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதை தொடர்ந்து கமல் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறார்.

இப்பொழுது அவர் அடுத்தகட்ட முயற்சியாக தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து பல திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். நீண்ட காலமாக எந்த படமும் தயாரிக்காமல் இருந்த கமல் தற்போது மீண்டும் பிஸியாக களத்தில் இறங்கியுள்ளார்.

இதற்காக அவர் நிறைய நடிகர்களை தன்னுடைய தயாரிப்பில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்து வருகிறார். அதன் முதல் கட்டமாக நடிகர் ஆர்யாவை வைத்து கொம்பன் முத்தையா இயக்கும் ஒரு திரைப்படத்தை கமல் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்தக்கதையை முதன்முதலில் முத்தையா கமலுக்காக தான் கூறினார். ஆனால் கமலோ எனக்கு வயதாகி விட்டது அதனால் என்னால் நடிக்க முடியவில்லை வேண்டும் என்றால் நான் இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகுதான் ஆர்யா இந்த திரைப்படத்தில் நடிக்க தேர்வானார்.

இந்த படத்திற்காக அவருக்கு 15 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு உறுதி செய்யப்பட்டது. ஆனால் இடையில் இவர்களுக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை ஆர்யா திடீரென இந்த படத்தில் நடிப்பதில் இருந்து பின்வாங்கினார். இதனால் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் ஆர்யாவுக்கும் இடையே ஏதோ பெரிய மன கசப்பு என்ற கூறப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் அவர் முத்தையாவையும் அவர் பக்கம் இழுத்து விட்டார். எப்படி என்றால் இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க வேண்டாம் என்றும், நான் வேறு ஒரு பெரிய தயாரிப்பாளரை கொண்டு வருகிறேன் அவர்களுக்கு நீங்கள் இந்த படத்தை இயக்குங்கள் என்று முத்தையாவிடம் கூறியிருக்கிறார்.

இதற்கு முத்தையாவும் சம்மதம் தெரிவித்து ராஜ்கமல் நிறுவனத்திற்கு படம் செய்யும் முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளார். சம்பளம் விஷயம் வரை அனைத்தையும் பேசிவிட்டு ஆர்யா இப்படி திடீரென்று அந்தர் பல்டி அடித்தது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Trending News