திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

இந்த ஒரு கேரக்டரை தரமா இறக்கி இருந்தா பீஸ்ட் தப்பி இருக்கும்.. தலையாட்டும் அஜித் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் விஜயின் ஆக்சன் காட்சிகளும் , அற்புதமான தோற்றமும் பெருமளவில் பேசப்பட்டது. நடிகை பூஜா ஹெக்டேவின் கிளாமரான நடிப்பும்,வி.டி.வி கணேஷ் யோகிபாபுவின் நகைச்சுவையும் இப்படத்தின் முக்கியமாக அமைந்தது. ஆனால் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக அமையவில்லை. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து ரசிகர்கள் இணையத்தளம் மூலமாக நெல்சன் திலீப்குமாரிடம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒரு மாலினை ஹைஜாக் செய்யும் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்ற போராடும் வீரராகவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் விஜய். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களும் திரையரங்குகளில் ரசிகர்கள் நின்று கொண்டு பார்க்கும் அளவிற்கு தெறிக்கவிடும் பாடல் காட்சிகளாகவும் மாஸான நடனமும் அமைந்துள்ளது.

இந்த நிலையில் ஒரு படத்திற்கு எப்படி ஹீரோ முக்கியமோ, அதே அளவுக்கு வில்லனும் முக்கியம் அப்படி பீஸ்ட் திரைப்படத்தில் வில்லனாக நடித்த லில்லிபுட் பீஸ்ட் படத்தில் நடித்து இருக்கிறாரா? இல்லையா, என்கிற அளவிற்கு அவரின் கதாபாத்திரம் அமைந்தது.
நெல்சன் திலீப் குமாரின் திரைப்படங்களில் ஹீரோவுக்கு சமமாக வில்லனுக்கும் அழுத்தமான கதாபாத்திரத்தை அமைப்பார். ஆனால் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு மாஸ் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வில்லனை கோட்டை விட்டுவிட்டார் நெல்சன் திலீப்குமார்.

மிகப்பெரிய தீவிரவாதியான லில்லிபுட்வுடன் விஜய் ஒத்தைக்கு ஒத்த சண்டை போடும் காட்சிகள் கூட இத்திரைப்படத்தில் இடம்பெறவில்லை. மேலும் விஜய் படத்தில் கதாநாயகிகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்காது. ஆனால் பீஸ்ட் திரைப்படத்தில் வில்லனுக்கே முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. இதனால் தான் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கடந்து தோல்வியை சந்தித்துள்ளது. பூஜா ஹெக்டேவுக்கு கொடுத்த வெயிட்டேஜை கூட இப்படத்தில் வில்லனாக நடித்த லில்லிபுட்விற்கு கொடுக்கவில்லை என்பதே உண்மை.

மிக பிரம்மாண்டமான செட் போட்டு அமைத்துள்ள ஒரு மாலினை தீவிரவாதிகள் படையைக் கொண்டு வில்லன் ஹைஜாக் செய்திருக்கிறார் என்றால் அவருக்குக் எவ்வளவு வெயிட்டேஜ் வேண்டும் என்பது நெல்சனுக்கு தெரியாமல் போய் விட்டதோ, என்னமோ தெரியவில்லை. அது மட்டுமின்றி மொத்த மாலினையும் நடிகர் விஜய் மட்டுமே காப்பாற்றும் வகையில் சரியான லாஜிக் இல்லாமல் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இதுவே இத்திரைப்படத்தின் தோல்விக்கான காரணம் என அஜித் ரசிகர்களும் விமர்சகர்களும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News