அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் முந்தைய படங்களில் உள்ள முக்கியமான காட்சிகளை பார்த்து மிரண்டு போய் வாய்ப்பு கொடுத்தாராம். இப்போது இவர்கள் 3வது முறையாக கூட்டணி அமைக்கின்றனர், இந்து கூட்டணி எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பதை ரசிகர் தான் முடிவு செய்ய வேண்டும்.
அஜித், வினோத், போனிகபூர் கூட்டணியில் ஏகே 61 படம் உருவாகவுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் தன்னுடைய முதல் படத்தை எடுக்க பலரால் அலைக்கழிக்க பட்டுள்ளார் வினோத். இயக்குனர்கள் பார்த்திபன் மற்றும் விஜய்மில்டன் ஆகியோரிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்தார் வினோத்.
இவர் தன்னுடைய முதல் படமான சதுரங்க வேட்டை படத்திற்காக பல இன்னல்களை சந்தித்து உள்ளார். பணம் தான் எல்லாவற்றிற்கும் தீர்வு என நினைக்கும் சாமானியனின் கோபத்தை பற்றிய கதைதான் சதுரங்க வேட்டை. இந்த கதையை எழுதி வைத்துவிட்டு வினோத் பல தயாரிப்பாளர்களை அணுகியுள்ளார். ஆனால் எல்லோரும் அவரை நிராகரித்துள்ளனர்.
இதனால் வினோத் சூதுகவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமியிடம் இந்தக் கதையை கொடுத்து படிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அவரும் அப்புறம் பார்க்கலாம் என்று இவரை ஒதுக்கிவிட்டார். மேலும் அந்தக் கதையை நலன் குமாரசாமியின் தாயார் படித்துவிட்டு நன்றாக இருக்கிறது.
இதைப் படமாக எடுத்தால் நிச்சயமாக அந்த இயக்குனருக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என சிபாரிசு செய்யவே நலன் குமாரசாமி மனோபாலாவிடம் இந்தக் கதையை கொடுத்து தயாரிக்க வைத்தார். அதன்பிறகு வினோத் நட்ராஜை ஹீரோவாக வைத்து சதுரங்க வேட்டை படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இதைத்தொடர்ந்து வினோத் கார்த்தியிடம் ஒரு கதையைக் கூறியுள்ளார். அப்போது கார்த்தி காஷ்மோரா மற்றும் காற்று வெளியிடை படங்களில் ஒப்பந்தம் ஆகியிருந்தார். அதன்பிறகு வினோத் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தை ட்ரீம் வாரியர் தயாரித்திருந்தது. இதைத்தொடர்ந்து அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு வினோத்துக்கு கிடைத்தது. தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வினோத் வலம் வருகிறார்.