இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்க்கு மாஸ்டர் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். இதைதொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம்.
மேலும் விக்ரம் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் பல விஷயங்களை மெனக்கெட்டு செய்துள்ளார். மேலும், தான் கற்ற மொத்த வித்தையையும் இப்படத்தில் இறக்கியுள்ளார் இயக்குனர். இந்நிலையில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
விக்ரம் படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். அதாவது தற்போது படங்களை திருடி சிலர் இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் ஒரு இயக்குனர் தன் சொந்த கற்பனையில் எடுத்த படத்தை கதை திருட்டு எனவும் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்காக லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படத்தை டெல்லியில் உள்ள கார்ப்பரேட் நிறுவனத்தில் பதிவு செய்திருக்கிறார். இப்படம் எல்லா மொழியிலும் ஒரு பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகிறது. இதனால் இப்படத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என டெல்லியில் உள்ள கதை ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸில் பதிவு செய்திருக்கிறார்.
மேலும் விக்ரம் படத்தை ஒடிடி நிறுவனத்திடம் பெரிய விலைக்கு விற்கப்படும். இதனால் தற்காப்புக்காக லோகேஷ் கனகராஜ் இவ்வாறு தன்னுடைய படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் தான் இவ்வாறு மெனக்கெட்டு பல விஷயங்களை செய்த நிலையில் அது வீணாக போக கூடாது என முன்னெச்சரிக்கையாக லோகேஷ் இவ்வாறு செய்துள்ளார் என கூறப்படுகிறது.
விக்ரம் படத்தில் கமல் இளமையான தோற்றத்திற்காக பலகோடி செலவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜெயிலுக்குள் தான் உள்ளது. இதனால் இப்படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. கமலஹாசன் ரசிகர்கள் விக்ரம் படத்தின் ரிலீசுக்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.