தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக விஜய் மற்றும் அஜீத் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய திரைப்படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் அதை ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
இப்படி புகழின் உச்சியில் இருக்கும் இவர்களை பற்றி ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சிலர் வேண்டுமென்றே தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். அந்த வகையில் தயாரிப்பாளரான கே ராஜன் இவர்களை மீண்டும் மீண்டும் வம்புக்கு இழுப்பதில் குறியாக இருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே இவர் அஜித் மற்றும் விஜய் குறித்த பல கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அதிலும் சமீபத்தில் வெளியான வலிமை மற்றும் பீஸ்ட் இரண்டு படங்களும் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தது எனவும் இதற்கு காரணம் படத்தின் ஹீரோக்கள் தான் என்றும் அவர் பேசியிருந்தார்.
இது இரண்டு நடிகர்களின் ரசிகர்களையும் கொதிப்படைய செய்தது. தற்போது கே ராஜன் ரசிகர்களை மீண்டும் கடுப்பேற்றும் விதமாக ஒரு மேடையில் பேசி உள்ளார். அதில் அவர் அஜித்தின் முந்தைய இரண்டு படங்கள் மிகப்பெரிய அளவில் நஷ்டம் அடைந்தது. அப்படி இருக்கும் போது அவர் அடுத்த படத்தில் தன்னுடைய சம்பளத்தை 105 கோடியாக மாற்றி இருக்கிறார் என்று கோபமாக பேசியுள்ளார்.
மேலும் விஜய் இங்கிருக்கும் தயாரிப்பாளர்களை நஷ்டமடைய வைத்துவிட்டு தற்போது தெலுங்கு பக்கம் சென்று விட்டார் என்றும் தோல்வி படங்களை கொடுக்கும் உங்களுக்கு எதற்காக இவ்வளவு கோடி சம்பளம் என்றும் காட்டமாக பேசியுள்ளார்.
அவரின் இந்தப் பேச்சை கேட்ட ரசிகர்கள் தயாரிப்பாளர் ராஜனை கண்டபடி திட்டி தீர்க்கின்றனர். பட விழாவுக்கு கூப்பிட்டால் அந்த படத்தை பற்றி மட்டும் பேசுங்கள் தேவையில்லாமல் உங்கள் பப்ளிசிட்டிக்காக விஜய், அஜித்தை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள் என்று அவருக்கு எதிராக பேசி வருகின்றனர்.
மேலும் ஒரு படம் தோல்வியடைந்தால் அதில் படக்குழுவினர் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஹீரோவை மட்டும் தனியாக குறிப்பிடுவது ஏன் என்று ராஜனின் கருத்துக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.