வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வேறு ரூட்டில் விட்டதை பிடிக்கும் எ ஆர் முருகதாஸ்.. எதுக்கெடுத்தாலும் பழசை தோண்டி அசிங்கப்படுத்துறாங்க

தமிழ் சினிமா ஹீரோக்கள் யாரும் தற்போது ஏ ஆர் முருகதாசை நம்பி படத்தில் நடிக்க தயாராக இல்லை. அதற்கு காரணம் அவரின் படம் பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு வருகிறது. சர்கார் படத்தின் கதை திருட்டு பிரச்சனையில் கூட இவர் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் கடைசியாக இயக்கிய தர்பார் படமும் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அதனால் அவர் இப்போது தெலுங்கு பக்கம் சென்று விட்டார். தற்போது அவர் ஒரு தெலுங்கு ஹீரோவை வைத்து படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் த்ரிஷாவின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ராங்கி திரைப்படத்திற்கு முருகதாஸ் தான் கதை எழுதியிருக்கிறார். இந்தப் படத்தை முருகதாஸின் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றிய சரவணன் இயக்கியுள்ளார். இவர் தமிழில் மிகப் பெரிய ஹிட்டடித்த எங்கேயும் எப்போதும் திரைப்படத்தை இயக்கியவர்.

எதிர்பாராத ஒரு சாலை விபத்தில் சிக்கிய சரவணன் தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். அவருக்கு உதவும் நோக்கில் தான் முருகதாஸ் தன்னுடைய கதையை தன் அசிஸ்டன்ட்டை இயக்க சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதனால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் திரிஷா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கேரக்டரில் நடித்து இருக்கிறாராம். சமீபகாலமாக இப்படிப்பட்ட கதையைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் த்ரிஷாவுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று அவர் நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறார்.

அந்த அளவுக்கு மிகவும் பவர்புல்லாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கதையின் மூலம் தமிழ் சினிமாவில் தான் இழந்த இடத்தை திரும்பவும் பிடிக்க முருகதாஸ் திட்டம் போட்டு இருக்கிறார். அதனால் இந்தப் படம் ரிலீஸானால் முருகதாசுக்கு மிகப்பெரிய அளவில் பெயரும், புகழும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Trending News