சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

400 எபிசோடை கடந்தும் டிஆர்பி இல்லாததால் தூக்கப்பட்ட விஜய் டிவி சீரியல்.. மொக்க சீரியல் என முத்திரை குத்திய ரசிகர்கள்!

சினிமாவில்தான் காப்பி அடிக்கிறார்கள் என்றால் சீரியலிலும் அதைத்தான் செய்வதால் கடுப்பாகும் ரசிகர்கள் அந்தமாதிரியான சீரியல்களுக்கு தங்களது ஆதரவை கொடுப்பதில்லை. இதனால் அந்த சீரியல்களும் டிஆர்பியில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வேலைக்காரன் சீரியல் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான முத்து படத்தின் பாணியில் எடுக்கப்பட்டு அனுதினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இதில் வேலனாக நடிகர் சபரியும் வள்ளியாக கோமதி பிரியாவும் முன்னணி கதாபாத்திரத்தில்ட நடித்திருக்கின்றனர்.

இதில் அதிரடித் திருப்பங்களை ஏற்படுத்தி விருவிருப்பு கூட்டினாலும் சின்னத்திரை ரசிகர்களுக்கு வேலைக்காரன் சீரியலை சுத்தமாகவே பிடிக்காமல் போய்விட்டது. இதனால் டிஆர்பி-யில் பெரிதும் அடி வாங்கிக் கொண்டிருக்கும் வேலைக்காரன் சீரியலை நிறைவு செய்து விடலாம் என்ற முடிவில் விஜய் டிவி முடிவெடுத்துள்ளது.

எனவே சுமார் 400 எபிசோடை கடந்த இந்த சீரியலின் இறுதி அத்தியாயம் வரும் வாரம் ஒளிபரப்பாக இருக்கிறது. இத்தனை நாள் தான் மொக்கையாக ஒளிபரப்பான வேலைக்காரன் சீரியலை கடைசி வாரத்திலாவது உருப்படியா காட்டுங்கள் என ரசிகர்கள் இந்த சீரியலை கொடுத்த கமெண்ட் அடிக்கின்றனர்.

மேலும் இந்த சீரியல் நிறைவடைந்த பிறகு அதேநேரத்தில் ‘செல்லம்மா’ என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலிலும் வேலைக்காரன் சீரியலை இயக்கிக் கொண்டிருந்த கதிரவன் அவர்களே இயக்கப் போகிறார்.

மேலும் செல்லம்மா சீரியலின் கதாநாயகனாக சன் டிவியில் ஒளிபரப்பான லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலின் கதாநாயகன் விஜே ஹூசைன் முகமது கான் நடிக்க இருக்கிறார். ஹீரோயினாக சாந்தினி நடிக்கப்போகிறார். இந்த சீரியலின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. வேலைக்காரன் சீரியலை விட செல்லம்மா ரசிகர்களின் மனதை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News