அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 169 திரைப்படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் மற்ற நாயகன் நாயகிகளுக்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது கன்னட திரை உலகின் பிரபல நடிகர் இத்திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த இத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததை அடுத்து ரஜினிகாந்த் கண்டிப்பாக ரசிகர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்பதற்காக மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாருக்கு ரஜினியின் தலைவர் 169 திரைப் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான இத்திரைப்படத்தின் தோல்வியால் மனமுடைந்த நிலையில் தலைவர் 169 திரைப்படத்தின் கதையை கவனமாக எழுதிவருகிறார். மேலும் அடிக்கடி ரஜினியிடம் சென்று கதையை கூறிக் கொண்டு வருகிறாராம். மேலும் நெல்சனின் நண்பரும் முன்னணி நடிகருமான சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது கன்னட திரை உலகின் பிரபல நடிகர் சிவராஜ்குமார் ரஜினியுடன் கைகோர்த்து நடிக்கவுள்ளார். சமீபத்தில் கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலமாக கன்னட சினிமா உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில் கன்னட சினிமாவின் தரத்தை உயர்த்துவதற்காக அங்குள்ள நடிகர், நடிகைகள் தங்களது கதைகளை உன்னிப்பாக கவனித்து தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
கன்னடத் திரையுலகின் 80 களில் இருந்து தற்போது வரை கன்னட திரை உலகின் மாஸ் நடிகராக வலம் வரும் சிவராஜ்குமார், மறைந்த பிரபல நடிகர் புனித் ராஜ்குமாரின் அண்ணன் ஆவார். கன்னடத்தில் 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த சிவராஜ்குமார் தற்போது முதல்முறையாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தில் என்ட்ரி ஆகி முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.