தலைக்கனம் இல்லாத தளபதி.. விஜய்யை புகழ்ந்து பேசிய ரொமான்ஸ் கதாநாயகி

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றதாக பலரும் கூறி வருகின்றனர். தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் தற்போது முன்னணி நடிகையாக தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் தமிழில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதல் முதலாக டாக்டர் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடித்திருக்கும் அந்த படம் வருகிற 13-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் பிரியங்கா மோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தளபதி விஜயின் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

அந்தப் பேட்டியில் பிரியங்கா மோகன், விஜய் சார் என்னுடைய டாக்டர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டினார். அதுமட்டுமின்றி தெலுங்கிலும் நான் நடித்திருந்தார் ஒரு படத்தையும் குறிப்பிட்டு என்னை பாராட்டினார் எனக்கூறினார்.

அப்போது பிரியங்கா மோகன், விஜய் அவர்களிடம் நீங்கள் எங்களுடைய படங்கள் எல்லாம் பார்த்தீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு விஜய் நான் எல்லாருடைய படமும் பார்ப்பேன் என கூறியதாக பிரியங்கா மோகன் கூறியுள்ளார்.

இதனை கேள்விப்பட்டு ரசிகர்கள் விஜய் இன்று சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒரு மாஸ் நடிகர். ஆனால் தற்போது வளர்ந்து வரும் நடிகர் நடிகைகள் அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக பேசுவது கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாமல் இருப்பதை வைத்தே சோஷியல் மீடியாவில் தளபதி ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்.