நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் மாஸ்டர்.. 26 வருடங்களுக்கு முன்பே கமல் நடித்த பான் இந்தியா மூவி

நடிப்பு மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்களிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் உயிர்நாடியாக இருக்கிறார். தமிழ் ரசிகர்களும், தமிழ் சினிமாவும் இதுவரை கண்டறியாத பல புதுமையான விஷயங்களை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

அதனால்தான் இவர் ஆண்டவர் என்றும், உலக நாயகன் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அந்த வகையில் இவர் பல திரைப்படங்களில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

ஆனால் 90 காலகட்டத்தில் இவர் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் நம்மை பிரம்மிக்க வைத்தது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஏ எம் ரத்னம் தயாரித்த அந்த திரைப்படம் பல கோடி ரூபாய் வசூலை பெற்றது. இப்போது தமிழ் சினிமாவில் பான் இந்தியா திரைப்படம் என்ற ஒரு டிரென்ட் அதிக அளவில் உருவாகி இருக்கிறது.

ஆனால் கிட்டத்தட்ட 2626 வருடங்களுக்கு முன்பே அப்படி ஒரு திரைப்படத்தை எடுத்துக் காட்டிய பெருமை உலக நாயகனுக்கு உண்டு. இப்படம் வெளியான சமயத்தில் ஷங்கரின் திறமையான இயக்கத்தையும், கமலின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பையும் பாராட்டாத பத்திரிக்கைகளே இல்லை.

1996ல் வெளியான இந்த திரைப்படம் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகி சக்கைப் போடு போட்டது. அப்போதைய காலகட்டத்தில் வசூலை வாரிக்குவித்த பல படங்களின் சாதனையையும் இந்த திரைப்படம் முறியடித்தது.

அது கமல் சுதந்திரத்திற்காக போராடும் ஒரு வீரராகவும், ஊழலைத் தடுக்கும் வயதான கேரக்டரிலும் அசத்தியிருப்பார். அதோடு லஞ்சம் வாங்கும் மகனாக தந்தையின் கோபத்திற்கு ஆளாகி உயிர் துறக்கும் அந்த கதாபாத்திரமும் பட்டையை கிளப்பி இருக்கும்.

இப்போதும்கூட இந்த படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அதைக் காண்பதற்கு ரசிகர்கள் கூட்டம் கூடிவிடும். இப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த இந்த திரைப்படம் தமிழக அரசின் விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை தட்டிச் சென்றது. அதுமட்டுமல்லாமல் இதில் சிறப்பாக பணிபுரிந்த கமல்ஹாசன் உட்பட 3 பேருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.