புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தீராத பகைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்.. சகோதரர்களாக மாறிய சம்பவம்

தமிழ் சினிமாவில் இளம் நடிகரான சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தை தொடர்ந்த டான் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அதையெல்லாம் சமாளித்து ஒருவழியாக இப்போதுதான் தன்னுடைய இலக்கை நோக்கி பயணித்து வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் வெளியானபோது நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா, யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்லாமல் போச்சு. ஆனால் தமிழ் ஆடியன்ஸ் திறமை உள்ளவர்களுக்கு மட்டும்தான் அங்கீகாரம் குடுப்பாங்க என பதிவிட்டிருந்தார்.

இந்த டுவீட் மறைமுகமாக சிவகார்த்திகேயனை தாக்குவது போல தான் இருந்தது. மேலும் இந்த பதிவுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவியது. ஆனால் அருண் விஜய் தன்னுடைய டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருந்தது. அந்த பதிவு நான் போடவில்லை என விளக்கம் அளித்திருந்தார்.

இப்படி இருக்கையில் தற்போது அருண் விஜய்யின் மகன் அர்ணவ் பிறந்தநாள் அன்று அவருடைய புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் அருண் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதைப்பார்த்த சிவகார்த்திகேயன் அர்னவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி, ஓ மை டாக் படத்தை பார்த்து மகிழ்ந்தேன். தொடர்ந்து இதுபோன்று படிப்பு மற்றும் சினிமா இரண்டிலும் கவனம் செலுத்து என வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு அருண்விஜய் உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி பிரதர் என ரீட்வீட் செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய் இடையே ஒரு பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது என சினிமா வட்டாரத்தில் பேசி வந்த நிலையில் இந்த பதிவு மூலம் இருவரும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இந்நிலையில் அருண்விஜய் மகன் அர்ணவ் நடிப்பில் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ஓ மை டாக் படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Trending News