வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபல இயக்குனர்.. அப்ப படம் கண்டிப்பாக ஹிட்டுதான்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் விஜய் தன்னுடைய அசுர வளர்ச்சியும் அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் மூலம் பீஸ்ட் படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் சாதனை படைத்தது. இவருடைய அடுத்த படமான தளபதி 66 படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

இன்னிலையில் சமீபத்தில் விஜய் நடித்த மின்சார கண்ணா படத்தை, அந்தப் படத்தின் இயக்குனர் பற்றி கேஎஸ் ரவிக்குமார் பேசினார். அப்போது தளபதி விஜய் குறித்து இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் பேசிய தனிப்பட்ட சில விஷயம் தற்போது தளபதி ரசிகர்களின் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

‘விஜய் எப்போதும் வைராக்கியம் கொண்டவர். ஒரு விஷயத்தை எடுத்துவிட்டால், அதை எப்படியாவது முடிக்காமல் விட மாட்டார். அந்த அளவிற்கு அவர் தான் எடுத்துக் கொண்ட விஷயத்தில் ஜெய்பதில் ஆர்வமாக இருப்பார்’ என கூறினார். மேலும் விஜய் உடன் இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு நழுவியது. எதிர்காலத்தில் விஜய் வைத்து என்னால் படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை.

ஆனால் விஜய் படத்தில் நடிக்க ஆசை இருக்கிறது’ என கூறியுள்ளார். அதனால் கூடிய விரைவில் கேஎஸ் ரவிக்குமார் விஜய் படத்தில் நடிப்பார் என பலரும் கூறி வருகின்றனர். பெரும்பாலும் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய எல்லா படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் தோன்றி மறைவார்.

அப்படி இல்லை என்றால் கடைசியாக படம் முடியும்போது மட்டுமாவது வந்து வணக்கம் சொல்லி சென்று விடுவார். இப்படி நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் கேஎஸ் ரவிக்குமார், தளபதி விஜயுடன் சேர்ந்து நடித்தால் நிச்சயம் படம் ஹிட் அடிக்கும். ஆகையால் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் உச்ச இயக்குனராக இருந்த கேஎஸ் ரவிக்குமார் தற்போது அவரே தன்னுடைய மனதில் இருக்கும் ஆசையில் பகிரங்கமாக வெளிப்படுத்தி விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என ஏங்குகிறார்.

‘அதிர அடிச்சா உதிர விளையும்’ என்பதற்கேற்ப கேஎஸ் ரவிக்குமாரின் இந்த பேட்டி, நிச்சயம் விஜய் காதுக்கு எட்டினால், நிச்சயம் அவரே தான் நடிக்கும் படத்தில் கேஎஸ் ரவிக்குமாருக்கு ஏற்ற கேரக்டர் இருந்தால் சிபாரிசு செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

Trending News