வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சினிமாவுக்கு முழுக்கு போட்டு மும்பையில் செட்டிலான 6 நடிகைகள்.. மீண்டும் தூது விடும் ஆண்டிகள்

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பரிட்சயமான நடிகைகள் அதன் பின்பு பட வாய்ப்பு கிடைக்காததால் கல்யாணத்திற்கு பின்பு மும்பையில் செட்டிலாகி விட்டனர். ஆனால் இப்போது எங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் கிடைத்தால் நாங்கள் நடிப்போம் என தூது விட்டு இருக்கின்றனர்.

மேலும் அக்கா, அம்மா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களாக இருந்தாலும் நாங்கள் எதிர்பார்த்த அளவு சம்பளத்தை கொடுத்தால் தூள் கிளம்புவோம் என வாரி வரிந்து கொண்டு வருகிறார்களாம். அதில் கோபிகா மட்டும்தான் குடும்பம், குழந்தைகள் என மீண்டும் சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லாமல் உள்ளார். இந்நிலையில் மற்ற நடிகைகள் யார் என்பதை பார்க்கலாம்.

ரீமா சென் : மின்னலே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ரீமா சென். இதைதொடர்ந்து பகவதி, தூள், செல்லமே, திமிரு வல்லவன் போன்ற பல படங்களில் நடித்தார். இவர் ஷிவ் கரண் சிங் என்ற தொழிலதிபரை கடந்த 2012 திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ரீமா சென் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார்.

மாளவிகா : அஜித் நடிப்பில் வெளியான உன்னைத்தேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இதைதொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம் போன்ற படங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு திரைப் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

லைலா : பிதாமகன், முதல்வன், தில் போன்ற படங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் லைலா. இவர் கடந்த 2006 இல் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்து பிரசாந்தின் அந்தகன், கார்த்தியின் சர்தார் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரூபினி : கேப்டன் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ரூபினி. அழகு, இளமை, கவர்ச்சி, நடிப்பு என அனைத்து திறமையும் ஒரு சேர்ந்த ரூபினி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கணவர் குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டிலாகி இருந்தார். அவ்வப்போது தமிழ்நாட்டிற்கு வரும்போது சினிமா பிரபலங்களை சந்தித்து செல்வார். இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க ரூபினி ஆர்வம் செலுத்தி வருகிறார்.

நவ்யா நாயர் : ஒரு காலகட்டத்தில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நவ்யா நாயர். இவர் தமிழில் அழகிய தீயே, பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு நவ்யா நாயர் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நதியா : ரஜினி, பிரபு, சத்யராஜ் போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் நதியா. இவர் ஆன் ரசிகர்களை மட்டுமின்றி பெண் ரசிகர்களையும் கவர்ந்தார். இவர் 1988 இல் சிரில் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவிக்கு அம்மாவாக எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Trending News