புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஆபீஸ் எல்லாம் போட்டாச்சு.. சம்மந்தமே இல்லாமல் விஜய்க்கு வலைவிரிக்கும் தோனி

தமிழ் சினிமாவில் விஜய் எப்படியோ அதே போல் கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனி. அவர் வந்தாலே அரங்கமே அதிரும். இந்நிலையில் தோனி இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு சென்னை ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் தோனிக்கு அதிக ரசிகர் பட்டாளம் உள்ளனர். அதை வைத்து வியாபாரம் பண்ணலாம் என்ற நோக்கில் தோனி சில முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு அவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் தமிழ் சினிமா.

இதற்கு முதல் கட்டமாக சென்னையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறாராம். அதுவும் திருவான்மியூரில் ஆபீஸ் போட்டிருக்கிறார். தற்போது உள்ள நடிகர், நடிகைகளும் புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் மூலம் கல்லா கட்டி வருகின்றனர். தற்போது தோனியும் அதையே பின்பற்றுகிறார்.

தளபதி விஜய்யும், தோனியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் முதலில் தோனி விஜய்யை சந்தித்து படம் பண்ணலாமா என்று கேட்டுள்ளார். ஆனால் விஜய் தற்போது நான் இரண்டு, மூன்று படங்களில் ஏற்கனவே கமிட்டாகி விட்டேன் வரும் காலங்களில் நாம் இணைந்து பணியாற்றவும் எனக் கூறி அனுப்பிவிட்டாராம்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் நயன்தாராவின் படம் நல்ல வசூல் பெற்று வருவதால் நயன்தாராவை சந்தித்த பேசியுள்ளார் தோனி. தற்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் படத்தில் நடித்து வருகிறார். இதைதொடர்ந்து ஜூன் 9ஆம் தேதி நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனால் சில மாதங்களுக்குப் பிறகு தோனி தயாரிப்பில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தோனிக்கு சென்னையில் வருங்கால ஐபிஎல் அணியை வாங்கி வழிநடத்தவும் திட்டம் இருக்கிறது என கூறப்படுகிறது.

Trending News