புதன்கிழமை, ஜனவரி 15, 2025

செலவுக்கு கூட காசு இல்லாமல் தவிக்கும் சரிகா கமல்ஹாசன்.. தேசிய விருது நடிகைக்கு இப்படி ஒரு அவலமா!

இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த சரிகா, நடிகர் கமல்ஹாசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தற்போது தங்களின் அம்மா, அப்பாவை போல சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதில் இந்த தம்பதிகளின் மூத்த மகள் சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலம் ஆகியுள்ளார். இந்நிலையில் சரிகா கமல்ஹாசன் தான் பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டதாக ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.

சரிகா, கமல்ஹாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சில வருடங்களுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகு அவர் மும்பையில் தனியாக வசித்து வருகிறார். அவர்களின் இரண்டு மகள்களும் தாய் தந்தையுடன் இல்லாமல் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இப்படி அனைவரும் தனியாக இருந்தாலும் சரிகா தன் மகள்களை அவ்வப்போது சந்தித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் சரிகா கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது தன்னுடைய சொந்த செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார்.

இதனால் அவர் சீரியல்களில் நடித்து அதன் மூலம் தன்னுடைய தேவைகளை கவனித்து வந்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரிகா சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர்.

அதுமட்டுமல்லாமல் ஹேராம் படத்தில் பணிபுரிந்ததற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளரான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். இப்படி இரண்டு தேசிய விருதை பெற்று பிரபலமாக இருந்த அவருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று ரசிகர்கள் பரிதாபப்பட்டு வருகின்றனர். மகள்கள் இருவரும் நடிகைகளாக கைநிறைய சம்பாதிக்கும் போது பெற்ற தாயைப் பார்த்துக் கொள்ள முடியவில்லையா என்று அவர்களுக்கு எதிராகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News