ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

எல்லாரையும் திருப்பி அனுப்பும் விஜய் சேதுபதி.. திட்டம் புரியாமல் குழம்பி வரும் கோடம்பாக்கம்

திரைப்படங்களில் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் நடிகர்களின் மத்தியில் எந்த கதாபாத்திரம் வேண்டுமானாலும் கொடுத்தால் நடிக்க தயார் என்று தமிழ் சினிமாவில் எங்கே பார்த்தாலும் விஜய் சேதுபதி முகம் தான். வருடத்திற்கு 10 முதல் 15 படங்களில் நடித்துக் கொண்டு நாள் முழுவதும் பிஸியாகவே இருப்பவர்.

இப்பொழுது திடீரென்று சினிமாவிற்கு சிறிது காலம் பிரேக் விட திட்டம் போட்டிருக்கிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல் விஜய்சேதுபதி, உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்த ‘விக்ரம்’ படத்தையும் முடித்து விட்டார். இன்னும் அவர் கையில் இருப்பது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. அதன் பிறகு மாமனிதன், விடுதலை போன்ற படங்களுக்கு பின் விஜய் சேதுபதியின் கைவசம் எந்த படமும் இல்லை. அவரைத் தேடி வருபவர்களுக்கு எல்லாம் இப்போதைக்கு கால்ஷீட் இல்லை என்பதை மற்றும் தெளிவாக சொல்லி வருகிறாராம். இவரது திட்டம்தான் என்ன என்பது தெரியாமல் மொத்த கோடம்பாக்கமும் குழம்பி வருகிறது

அவரும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகுவதற்கு விருப்பமில்லாமல் சில காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். இதற்கு காரணம் தொடர்ந்து மக்கள் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அதனால் சிறிது காலம் படத்தை கமிட் செய்துகொள்ளாமல் ஓய்வில் இருப்போம் என்று முடிவில் இருக்கிறாரோ என்னவோ! அத்துடன் விஜய் சேதுபதியின் நட்பு வட்டாரங்களும், மனிதன் பல படங்களில் ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்து விட்டார். கொஞ்ச நாள் சந்தோசமான வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறார் என்றும் கூறுகின்றனர்.

அதனால் இப்பொழுது ஒரு சின்ன பிரேக். நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் மட்டும் முதலில் முடிப்போம். அதன்பின் ஓய்விற்குப் பின் பார்த்துக்கொள்ளலாம் என்ற விஜய் சேதுபதி ஒரு முடிவில் இருக்கிறார் என்று தெரியவருகிறது.

Trending News