வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

வாய் கொடுத்து பல்பு வாங்கிய ராஷ்மிகா மந்தனா.. இதுக்குத்தான் சும்மா இருக்கனும்னு சொல்றது

கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது.

அதை எல்லாம் ஏற்காமல் இருந்து வந்த ராஷ்மிகா தற்போது விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். விஜய் நடிப்பில் தற்போது தளபதி 66 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தான் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.

நீண்ட நாட்களாக விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவருடைய கனவு தற்போது நனவாகி விட்ட சந்தோஷத்தில் அவர் இருக்கிறார். மேலும் இப்படத்தில் பிரபு, சரத்குமார், சங்கீதா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.

அதனால் இப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஷ்மிகாவை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கிண்டல் அடித்து கமென்ட் பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வருவார்.

அதேபோன்று சமீபத்தில் ராஷ்மிகா ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது தன்னுடைய பெயர் ரொம்ப நீளமான பெயர் என்று கூறினார். மேலும் தன்னுடைய பெயரை ராஷ்மிகா மந்தனா என்று கூற கஷ்டமாக இருந்தால் ரசிகர்கள் ராஷ் என்று கூறலாம் என்று தெரிவித்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் தற்போது அவரை ராஷ், பிரஷ் என்று இஷ்டத்துக்கு ஒரு பெயரை வைத்து சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். இதனை பார்த்த ஒரு சில ராஷ்மிகா வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம், இப்படி தேவையில்லாமல் ஏதோ பேசி பல்பு வாங்கி விட்டதாக கூறி வருகின்றனர்.

Trending News