தமிழ் சினிமாவில் குடும்ப ஆடியன்சை கவர்ந்தவர் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். தான் இயக்கும் படங்களில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்த அனைவரது கவனத்தையும் பெறுவார். இந்நிலையில் தற்போது முன்னணி நடிகர்களாக உள்ள ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்களின் படங்களை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினிக்கும், கமலுக்கும் உள்ள வித்தியாசத்தை கூறியுள்ளார். ரஜினியை வைத்த முத்து, படையப்பா, லிங்கா போன்ற படங்களை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார். முத்து, படையப்பா மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் லிங்கா படம் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் படையப்பா இரண்டாம் பாகத்தை உருவாவதற்குக் கதை வைத்துள்ளதாக அண்மையில் கேஎஸ் ரவிக்குமார் கூறியிருந்தார். ஆனால் ரஜினி தான் நடிக்கும் படங்களில் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பமாட்டார். இதனால் வேறு ஹீரோவை கே எஸ் ரவிக்குமார் தேடி வருகிறார்.
அதேபோல் கமலஹாசனின் அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், தெனாலி, தசாவதாரம் போன்ற வெற்றி படங்களை கேஎஸ் ரவிக்குமார் கொடுத்துள்ளார். இந்த எல்லா படங்களுமே கமலின் திரைவாழ்க்கையில் முத்திரையாக அமைந்த படங்கள்.
இப்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் கமலும், ரஜினியும் பல படங்களில் நடித்து வருகின்றனர். ரஜினி என்றால் மாஸ், கமல் என்றால் கிளாஸ் எனக் கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார். இந்த இரண்டு பேருக்கும் இரண்டு வித்தியாசமான மைண்ட் செட் உள்ளது.
இவர்கள் இருவரும் நமக்கு இதுதான் கரெக்டான ரூட் என செலக்ட் பண்ணிட்டாங்க எனக் கூறியுள்ளார். அதனால்தான் தங்களுக்கு எது வருமோ அதை தேர்ந்தெடு நடிப்பதால் தான் இவ்வளவு உயரத்திற்கு இவர்களால் போக முடிந்தது என்றும் கூறியுள்ளார்.