வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகைக்கு திருமணமா.? முத்த மழையில் நனைந்த தம்பதிகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா தொடருக்கு மக்கள் மத்தியல் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அந்த ரசிகர்கள் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சொந்த வாழ்க்கை பற்றி தெரியவும் ஆர்வமாக உள்ளனர். மேலும் சின்னத்திரை பிரபலங்களும் தங்களது சமூக வலைதளங்களில் அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அவ்வாறு பாரதிகண்ணம்மா அவர் தொடரில் ஆரம்பத்தில் நடித்த பிரபலங்கள் பலர் தற்போது மாறி உள்ளனர். ஏன் இத்தொடரின் கதாநாயகி ரோஷினி கூட மாறி உள்ளார். இந்நிலையில் இத்தொடரில் சௌந்தர்யாவின் மகளாக நடித்து வந்தவர் ஸ்ருதி சண்முகம்.

இவர் நாதஸ்வரம் தொடரின் மூலம் மக்கள் மத்தியில் நான்கு பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதிகண்ணம்மா போன்ற தொடர்களில் நடித்துள்ளார். சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்ருதி சில நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் இன்று அவருக்கு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

நேற்று ரிசப்ஷன் மற்றும் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடியுள்ளனர். ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். பாரதிகண்ணம்மா தொடர் பிரபலங்கள், நாதஸ்வரம் நடிகை, நடிகைகள், ரோஜா தொடர் பிரியங்கா, பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

 sruthi shanmugam

sruthi shanmugam

தற்போது ஸ்ருதி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் மீண்டும் ஸ்ருதி சீரியலில் நடிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்துள்ளனர்.

 sruthi shanmugam

sruthi shanmugam
sruthi shanmugam
sruthi shanmugam

 

Trending News