சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பிரபல சீரியல் நடிகைக்காக கண்ணீர் விட்ட ஸ்ரீநிதி.. சிம்புவை தொடர்ந்து அடுத்த டார்கெட்டும் ரெடி

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொடர்களில் நடித்த பிரபலமானவர் ஸ்ரீநிதி. கடந்த இரண்டு, மூன்று நாட்களாக இணையத்தில் இவருடைய பேச்சுதான் அடிபட்டு வருகிறது. சிம்பு தன்னை காதல் டார்ச்சர் செய்வதாக இவர் போட்ட பதிவு சர்ச்சைக்கு உள்ளானது. தற்போது சிம்புவின் ரசிகர்கள் ஸ்ரீநிதியை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

இந்த பிரச்சனையே தற்போது முடியாத நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஸ்ரீநிதி. அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் ஸ்ரீநிதி நடித்திருந்தார். இத்தொடரில் கதாநாயகியாக வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நட்சத்திரா.

மேலும் ஜீ தமிழ் தொடர்களில் நடித்த செம்பருத்தி ஷபானா, நட்சத்திரா, சைத்ரா ரெட்டி, ரேஷ்மா, ஸ்ரீநிதி ஆகியோர் நெருங்கி பழகி வந்தனர். அவ்வப்போது இவர்கள் எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும். இந்நிலையில் முதலில் சைத்ரா ரெட்டிக்கு திருமணம் ஆனது.

இதை தொடர்ந்து ஷபானா மற்றும் ரேஷ்மா இருவருக்கும் அடுத்தடுத்து திருமணங்கள் முடிந்தது. இந்நிலையில் இதில் நட்சத்ராவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளதாம். இதைப்பற்றி ஸ்ரீநிதி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதாவது நச்சத்திராவுக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான்.

நட்சத்ரா கஷ்டப்பட்டு தான் இந்த உயரத்தை அடைந்து உள்ளார். இந்நிலையில் கல்யாணம் என்ற பெயரில் அவரை ஒரு குடும்பம் ஏமாற்ற உள்ளது. அதாவது நட்சத்திராவின் வருங்கால கணவர் நல்லவர் இல்லை. அதைக் கேட்க போனால் என்னையே அடிக்க வருகிறாள்.

ஏற்கனவே சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு ஏற்பட்டது போல் நட்சத்திராவுக்கு வரக்கூடாது. இவ்வாறு பேசி ஸ்ரீநிதி ஒரு வீடியோவை பதிவிட்டு சிறிது நேரங்களிலேயே அதை நீக்கியும் விட்டார். இவர் சொல்வது உண்மையா அல்லது வேண்டுமென்றே நட்சத்ராவின் வாழ்க்கையைக் கெடுப்பதற்காக இவ்வாறு செய்கிறாரா என ரசிகர்கள் குழம்பி உள்ளனர்.

Trending News