சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

39 ஆண்டுகள் நடித்த பின் சாதித்த ரேவதி.. தாய் நாட்டில் கிடைத்த பெரிய கௌரவம்

மண்வாசனை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 80, 90 காலங்களில் மலையாளம், தெலுங்கு, கன்னடம்,மற்றும் ஹிந்தி என இந்திய மொழிகளில் கொடிகட்டிப் பறந்த நடிகை ரேவதி. இவரது குழந்தைத்தனமான நடிப்புக்கு இன்று வரை ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறது. இவர் எல்லாவிதமான கதாபாத்திரத்திலும் அசத்தும் திறமை கொண்டவர்.

அந்த காலகட்டத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், மோகன், முரளி, அமிதாப்பச்சன், சல்மான்கான், மோகன்லால், சிரஞ்சீவி உள்ளிட்ட நட்சத்திர நடிகருடன் நடித்துள்ளார். அஞ்சலி, அரங்கேற்றவேளை, புதுமைப்பெண், தேவர்மகன் போன்ற படங்களில் இவரின் நடிப்பு இன்று வரை யாராலும் மறக்க முடியாதது.

தேவர் மகன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது உட்பட மூன்று தேசிய விருதுகளை வாங்கி உள்ளார் . நடிகை சாவித்திரிக்கு பின் நடிகையர் திலகமாக போற்றப்பட்டவர். ரேவதி கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார்.

1983 இல் மலையாளத்தில் கட்டத்தை கூடு என்ற படத்தில் அறிமுகமான ரேவதி, சமீபத்தில் வெளியான பூதகாலம் என்ற படத்தில் நடித்திருந்தார், இதில் கணவன் இல்லாமல் ஒரு பெண் ஒற்றை ஆளாக இருந்து தன் மகனை வளர்க்கும் தாயாக நடித்து, ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளார்.

இந்தத் திரைப்படத்தை ராகுல் சதாசிவம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு, 52ஆவது சிறந்த நடிகைக்கான விருதை கேரள அரசு அறிவித்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் தனது தாய் மொழியில் நடிக்க வந்து 39 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ரேவதி முதன்முறையாக இந்த விருதை பெறுகிறார். இவர் தமிழ் மொழியில் சிறந்த நடிகைக்கான விருதை பல முறை வென்றாலும் இது அவருக்கு ஒரு புது மாற்றத்தை கொடுத்துள்ளதாம்.

- Advertisement -spot_img

Trending News