ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஒரே ஒரு சீரியலால் எகிறும் விஜய் டிவி டிஆர்பி.. விட்டுக்கொடுக்காமல் போட்டிபோடும் சன் டிவி!

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறார்கள் என்பதையும், எந்த சீரியல் மக்களுக்கு பிடித்தமான சீரியல் என்பதை அந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் மூலம் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் விஜய் டிவி மற்றும் சன் டிவி டிஆர்பி ரேட்டிங் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

இதில் பாக்கியலட்சுமி சீரியல் இதுவரை இல்லாத அளவுக்கு டிஆர்பி ரேட்டிங்கில் உச்சம் பெற்று இருக்கிறது. இந்த சீரியலில் கடந்த வாரம் முழுவதும் ரசிகர்கள் என்னென்னவெல்லாம் நடக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருந்தார்களோ அவையெல்லாம் அடுத்தடுத்து அரங்கேறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் அந்த சீரியலை தவறாமல் கடந்த வாரம் முழுவதும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆகையால் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பெற்றிருக்கிறது. இந்த சீரியலை தொடர்ந்து இரண்டாம் இடம் பாரதிகண்ணம்மா சீரியலுக்கும், மூன்றாம் இடம் கூட்டுக் குடும்பத்தை அழகாக காண்பித்துக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது.

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் 4-வது இடம் ராஜா ராணி2 சீரியலுக்கும், ஐந்தாவது இடம் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் பெற்றிருக்கிறது. இதையடுத்து மௌனராகம், தென்றல் வந்து என்னைத் தொடும், காற்றுக்கென்ன வேலி, நாம் இருவர் நமக்கு இருவர் 2 போன்ற  சீரியல்கள் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் அடுத்தடுத்த இடத்தைப் பெற்றிருக்கிறது.

இதைப்போன்று சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில், இந்த சீரியல் துவங்கப்பட்ட நாளிலிருந்தே பல மாதங்களாக டாப் இடத்தை சன் டிவியின் கயல் சீரியல் தனக்கு சொந்தமாக்கி உள்ளது. இரண்டாவது இடம் இரண்டு பேரை ஒரே ட்ராக்கில் ஓடிக்கொண்டிருக்கும் சுந்தரி சீரியலுக்கு கிடைத்திருக்கிறது.

மூன்றாவது இடம் அண்ணன் தங்கை பாசப்பிணைப்பை வெளிக்காட்டும் வானத்தைப்போல சீரியல் பெற்றுள்ளது. 4-வது இடம் ஆக்ஷன் காதல் கலந்த சீரியல் ஆன ரோஜா சீரியலுக்கும், ஐந்தாவது இடத்தை சமீபத்தில் துவங்கப்பட்ட புத்தம்புது சீரியலான எதிர்நீச்சல் பெற்றிருக்கிறது. இதை அடுத்து அபியும் நானும், பாண்டவர் இல்லம், சித்தி2, அன்பே வா போன்ற சீரியல்கள் சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது.

Trending News