பல வருட கனவை நிறைவேற்றிய கமலுக்கு நன்றி.. சம்பளமே இல்லாமல் சாதித்துக் காட்டிய ரோலக்ஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நான்கு வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் தன்னுடைய நடிப்பில் மிரள விட்ட விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்கிலும் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்திருக்கும் பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.

நீண்ட நாட்களாக கமலஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே விக்ரம் படத்தில் சம்பளமே இல்லாமல் சூர்யா தன்னுடைய மிரட்டலான நடிப்பை ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தி நடித்து ரசிகர்களிடம் பாராட்டு பெற்றிருக்கிறார். இந்நிலையில் சூர்யா இந்த படத்தை குறித்து தற்போது ட்விட் செய்துள்ளார்.

அதில் கமலஹாசன் அண்ணனுடன் நடிப்பதைப் பற்றி எப்படி வார்த்தைகளால் சொல்வது, கமல் அண்ணனுடன் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய நீண்டநாள் கனவு நிறைவேறி இருக்கிறது. இதற்கு வாய்ப்பு கொடுத்த விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு என்னுடைய கோடான நன்றிகள் என்ற நெகிழ்ச்சி ஆன பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

சூர்யாவின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் எக்கச்சக்கமான லைக்குகளையும், ஷேர்களையும் பெற்று ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. அத்துடன் கமலஹாசனுடன் இணைந்து நடிப்பதை பற்றி இந்த அளவிற்கு உருக்கமாக பேசியிருப்பது உலகநாயகன் உடைய ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

suriya-twit-1
suriya-twit-1

இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு சூர்யா நன்றி சொல்லி இருப்பதால் பலருடைய பாராட்டுக்களை பெற்றுக் கொண்டிருக்கிறார். அத்துடன் விக்ரம் படத்தின் படப்பிடிப்புத் தளம் மற்றும் படக்குழுவினர் வித்தியாசமான அனுபவத்தை தனது தந்ததாகவும் கூறியிருக்கிறார்.

விக்ரம் படத்தில் சூர்யா மற்றும் கமலஹாசன் இருவருக்கும் இடையேயான நட்பிற்காகவே கமலஹாசனுக்கு சூர்யா பார்ட்டி கொடுத்திருந்த நிலையில், படங்களை தயாரிக்கும் முனைப்புடன் இருக்கும் கமலஹாசன் இனி வரும் நாட்களில் சூர்யா படத்தையும் தயாரிக்க வாய்ப்பு இருக்கிறது.