உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களுடன் சேர்ந்து திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே புதுமுக இயக்குனர்களுடன் சேர்ந்து உலகநாயகன் கைகோர்த்து நடித்த சூப்பர் ஹிட் திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.
இயக்குனர் ஷங்கர் : 1996 ஆம் ஆண்டு இந்தியன் 2 திரைப்படத்தை உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாக்கினார். இத்திரைப்படம் உலகளவில் பிரம்மாண்டமாக பேசப்பட்ட நிலையில், ஜென்டில்மேன், காதலன் உள்ளிட்ட இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய சங்கருக்கு வாய்ப்புக்கொடுத்து அத்திரைப்படத்தில் கமலஹாசன் நடித்தார்.
சக்ரி டோலட்டி: உன்னைப்போல் ஒருவன் 2009 ஆம் ஆண்டு கமலஹாசன்,மோகன்லால் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற உன்னைப்போல் திரைப்படத்தை இயக்குனர் சக்ரி டோலெட்டி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ஹிந்தியில் வெளியான வெட்னஸ்டே திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இதுவே சக்ரி டோலெட்டியின் முதல் திரைப்படமாகும்.
இதனிடையே சக்ரி டோலெட்டிக்கு கமலஹாசன் இத்திரைப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கொடுத்து தமிழில் உன்னைப்போல் ஒருவன் மற்றும் தெலுங்கில் ஈநாடு என்ற டைட்டிலில் இத்திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. தொடர்ந்து சக்ரி டோலெட்டி தல அஜித்தின் நடிப்பில் பில்லா 2 திரைப்படத்தை இயக்கினார்.
இயக்குனர் சரண்: 2003ஆம் ஆண்டு வெளியான, வசூல்ராஜா எம்பி.பி.எஸ் திரைப்படத்தை இயக்குனர் சரன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் முன்னா பாய் எம்பி.பி.எஸ் என்ற இந்தி படத்தின் ரீமேக்காகும். இவர் காதல் மன்னன், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சரணுக்கு உலகநாயகன் கமலஹாசன் வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தார்.
இத்திரைப்படத்தில் கமலின் நடிப்பும், கதையும் பிரம்மாண்டமான ஹிட் கொடுத்த நிலையில், இதற்குப்பின் சரணின் மார்க்கெட் எகிறியது. இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ள கமலஹாசன் மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட மூன்று திரைப்படங்களை மட்டுமே இயக்கிய புதுமுக இயக்குனர் ஆவார்.
லோகேஷ் கனகராஜ்: உலகநாயகன் கமல்ஹாசன்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகி தற்போது வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. சினிமாவில் நுழைந்து ஒரு சில படங்களிலேயே தன்னுடைய கனவு நாயகனை இயக்கிய பெருமை கிடைத்துவிட்டதாக இந்தப் படத்திற்குப் பிறகு லோகேஷ் பூரிப்படைந்தார். அத்துடன் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உலகநாயகனை வித்தியாசமாக லோகேஷ் காட்டி இருந்தது, லோகேஷ்-க்கு கமலஹாசன் கொடுத்த வாய்ப்பே முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே கமலஹாசன் பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல ஒரு வெற்றியை கொடுத்த திரைப்படங்களாகும். அதுமட்டுமில்லாமல் உலகநாயகன் வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள் இன்றுவரை வெற்றி இயக்குனர்களாக உள்ளனர் என்பதே சுவாரசியம்.