வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விக்ரம் பட வெற்றி.. லோகேஷ்-க்கு ஒரு கோடி மதிப்பிலான காரை பரிசளித்த கமலின் புகைப்படம்

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 150 கோடி வசூல் செய்துள்ளது.

விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல திரைப்பிரபலங்கள் இப்படத்தில் நடித்து இருந்தனர். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது லோகேஷ் கனகராஜ் திரைக்கதை மற்றும் இயக்கம் தான். இந்நிலையில் விக்ரம் படத்திற்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் குவித்து வருகின்றனர்.

கமலின் திரை வாழ்க்கையிலே முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது. மேலும் கமலின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையும் விக்ரம் படம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. கண்டிப்பாக கமலின் மற்ற படங்களின் வசூலை விக்ரம் படம் முறியடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் கமலஹாசன் தற்போது தன்னுடைய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இக்கு ஒரு கோடிக்கு மதிப்புள்ள லக்சஸ் காரை பரிசாக கொடுத்துள்ளார். தற்போது லோகேஷ்யிடம், கமல் காரின் கீயை கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

கிட்டத்தட்ட உலகநாயகனின் படங்கள் நான்கு ஆண்டுகள் வெளிவராமல் இருந்த நிலையில் அவற்றை ஒட்டுமொத்தமாக போக்கும் வகையில் ஒரு மாபெரும் வெற்றியை சுவைத்துள்ளார் கமலஹாசன். இதற்கு பெரும்பங்கு லோகேஷ் தான் காரணம்.

அவருக்கு ஒரு வார்த்தையில் நன்றி சொன்னால் போதாது என ஒரு காரை பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார் கமலஹாசன். மேலும், இப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும் TVS Apache RTR 160 பைக்கை பரிசாக கமலஹாசன் கொடுத்துள்ளார். இந்நிலையில் விக்ரம் படத்தை தொடர்ந்த விக்ரம் 3 படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

kamal presents the car to lokesh
kamal presents the car to lokesh

Trending News