வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தலைவர்-169 யாரும் எதிர்பாராத கூட்டணி.. ஹிட் கொடுக்க போராடும் ரஜினி

அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தின் தலைவர் 169 படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

நெல்சன் திலீப்குமார் தளபதி விஜயை வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்று ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றதால் தலைவர் 169-வது படத்தை இயக்க போவது இல்லை என்ற செய்திகள் இணையத்தில் உலாவியது.

ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என உறுதிப்படுத்தினார். இருப்பினும் நெல்சனை மட்டும் இயக்கினால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காது என்பதற்காக இந்த படத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான கேஎஸ் ரவிக்குமார் இணைந்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே படையப்பா, முத்து, லிங்கா போன்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். ஆகையால்  தலைவர் 169 படத்தை இயக்குவது நெல்சன் திலீப்குமார் என்றும், திரைக்கதை கேஎஸ் ரவிக்குமார் எழுதுவார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடைசியாக சூப்பர் ஸ்டார் நடித்திருந்த அண்ணாத்த திரைப்படம் சீரியல் மெட்டீரியல் என்றெல்லாம் விமர்சித்த நிலையில், அவர் படத்தை அவ்வளவு சீக்கிரம் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சோடை போக விடமாட்டார்கள். அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்ததாலே 250 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது.

ஆகையால் ரசிகர்களின் நம்பிக்கையை இந்தப் படத்தில் நிச்சயம் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தலைவர் 169-வது படத்தின் கதை மற்றும் இயக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ரஜினி பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் கவனமாக செய்து அடுத்த படத்தை ஹிட் கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

ஆகையால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதமான ஜூலை மாதத்தில் துவங்க இருக்கிறது. திட்டமிட்டபடி படப்பிடிப்பு நிறைவடைந்தால் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தலைவர் 169 திரைப்படம் ரிலீஸ் ஆகும். மேலும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், ஐஸ்வர்யாராய், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்துள்ளனர்.

Trending News