சிலம்பரசனை போல் ஒரு பையனை நான் இந்த ஜென்மத்தில் ஈன்றது, எனக்கு ஒரு பெரிய பாக்கியம் என நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். டி ராஜேந்தர் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக டி ராஜேந்தரின் மகனும், நடிகருமான சிலம்பரசன் தெரிவித்திருந்தார். அதற்காக தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் அரசு உதவி பெற்று அமெரிக்கா செல்வதை உறுதிப்படுத்தினார். இதனிடையே அமெரிக்கா செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் டி .ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ,சிலம்பரசனை பெற்றெடுத்ததற்கு பெரிய பாக்கியம் அடைகிறேன், எனது சிகிச்சைக்காக சிலம்பரசன் தான் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை கூட தள்ளி வைத்துள்ளார். மேலும் பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்து, கிட்டத்தட்ட 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கி தனக்காகவும், குடும்பத்துக்காகவும் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து உழைத்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.
இன்று நான் வெளிநாட்டிற்கு போய் சிகிச்சை மேற்கொள்ள போவதற்கு காரணம் என் மகன் சிலம்பரசன் தான், அவருக்காகத்தான் நான் வெளிநாடு செல்கிறேன் என தெரிவித்துள்ளார். சிலம்பரனை மகனாக பெற்றெடுத்து ,சிஷ்யனாக வளர்த்த குரு என்ற முறையில் தான் பெருமைப்படுவதாக டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சிலம்பரசன் நான் பெற்றெடுத்த மன்மதனாக மட்டுமில்லாமல் நல்ல மகனாக இருக்கின்றார். அதுவே எனக்கு போதும் என்றும் வல்லவனாக படத்தில் மட்டும் நடிக்காமல், வாழ்க்கையில் ஒரு நல்லவனாக இருக்கின்றான் இப்படித்தான் அனைத்து மகன்களும் இருக்க வேண்டும் என ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்வதாக டி ராஜேந்திரன் நெகிழ்ச்சியுடன் பேசினர்.
தற்போது இந்த பேட்டி சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், தன் மகனைப் பற்றி டிஆர் பெருமையாக பேசியது தவறில்லை. ஆனால் சிம்பு மட்டும் தான் இவ்வுலகில் சிறந்த மகன் என்று சற்று ஓவராக பில்டப் கொடுத்து டி ஆர் பேசுவது சாதாரண மக்களுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.