புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்து நிரந்தரமான இடத்தில் 6 ஹீரோயின்கள்.. அதே பொலிவுடன் இருக்கும் திரிஷா!

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும். நடிகைகள் சில வருடங்கள் மட்டுமே அவர்களது ஆதிக்கத்தை காட்ட முடியும். அவர்களது மார்க்கெட் போன பிறகு அவர்களை திரையில் பார்ப்பது மிகவும் அரிது. ஆனால் தற்போது ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த 6 ஹீரோக்களை பார்க்கலாம்.

குஷ்பூ : ரசிகர்கள் முதல் முறையாக நடிகைக்கு கோயில் கட்டியது என்றால் அது குஷ்புக்கு தான். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் ஜோடியாக குஷ்பு நடித்துள்ளார். பெரும்பாலும் பிரபு, குஷ்பூ காம்போவில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து மீண்டும் சின்னத்தம்பி நந்தினி போல மாறி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

மீனா : குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனா. அதன் பிறகு டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். தற்போதும் மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது மீனாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் மீனாவின் குழந்தை நைனிகாவும் தற்போது குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து வருகிறார்.

சிம்ரன் : கமல், விஜயகாந்த், விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சிம்ரன். விஜய்க்கு இணையாக நடனம் ஆடக் கூடிய நடிகை என்ற பெயரை சிம்ரன் பெற்றுள்ளார். சிம்ரன் தற்போது வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தற்போது சிம்ரன் அம்மா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஜோதிகா : நடிப்பு ராட்சசி என்ற பெயர் பெற்றவர் ஜோதிகா. ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒவ்வொரு விதமான எக்ஸ்பிரஷன் கொடுக்கக் கூடியவர். திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

திரிஷா : திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் தாண்டியும் கதாநாயகியாகவே நடித்து வருபவர் நடிகை திரிஷா. கதாநாயகனுக்கு இணையான ரசிகர் கூட்டம் திரிஷாவுக்கு உள்ளது. இவருடைய இளமையும், அழகும் தற்போது வரை ரசிகர்களின் கனவில் திரிஷாவை நிலைத்து நிற்க வைத்துள்ளது.

நயன்தாரா : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது பல படங்களில் பிசியாக உள்ளார். இவர் திரைத்துறைக்கு வந்த ஆரம்பத்தில் பல சறுக்கல்களை சந்தித்தாலும் அதன் பிறகு சுதாரித்துக்கொண்டு நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக நயன்தாரா வலம் வருகிறார்.

Trending News