அந்த இயக்குனரிடம் மட்டும் பம்மும் விஜய் சேதுபதி.. காற்றில் பறந்த கண்டிஷன்கள்

விஜய் சேதுபதி கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதாவது எந்த இயக்குனர் தன்னை தேடி வந்தாலும் உடனே கால்ஷீட் கொடுத்து விடுகிறார். மேலும் எந்த கதாபாத்திரங்களாக இருந்தாலும் நடிக்கவும் தயாராக இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டியிருந்தார். மேலும் இவர் நடித்த சந்தானம் கதாபாத்திரத்திற்கு பலர் இடத்தில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது.

இவ்வாறு இருக்கையில் தற்போது விஜய்சேதுபதி தன்னை நாடிவரும் இயக்குனர்களுக்கு ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம். அதாவது அடுத்த மூன்று வருடங்களுக்கு விஜய் சேதுபதி படு பிசியாக உள்ளாராம். இதனால் மூன்று வருடங்கள் கழித்து வாருங்கள் படம் பண்ணலாம் என கூறிவருகிறாராம்.

பெரிய இயக்குனர்கள் எல்லாம் தற்போது விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க வேண்டும் என்று எண்ணுகையில் தற்போது விஜய்சேதுபதி இவ்வாறு சொல்லி இருப்பது பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் ஒரு இயக்குனருக்காக மட்டும் விஜய் சேதுபதி தான் போட்டிருக்கும் கண்டிஷனை தகர்த்தியுள்ளார்.

அதாவது மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா படத்தின் இயக்குனர் காயத்ரி மற்றும் புஷ்கர் ஆகியோருக்கு மட்டும் படம் பண்ணித் தருவதாக விஜய் சேதுபதி கூறியுள்ளாராம். இந்த இயக்குனர்கள் தற்போது வெப்சீரிஸ்களை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் விஜய்சேதுபதியை மும்பையில் சந்தித்து இவர்கள் கதை கூறியுள்ளனர். இந்த படத்திற்கு விஜய் சேதுபதியும் ஓகே சொல்லிவிட்டாராம். இதனால் மிக விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →