புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கார்த்தி படத்தின் வசூலுக்கு செக் வைத்த வெற்றிக்கூட்டணி.. தீபாவளி ரேஸில் இணைந்த புதிய படம்

தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை என்பதைத் தாண்டி புதிய படங்களின் மீது தான் இளைஞர்களுக்கு அதிக விருப்பம் இருக்கும். தீபாவளி சமயத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் போட்டி போட்டுக்கொண்டு ரிலீசுக்கு தயாராகும். அந்த வகையில் அஜித்தின் ஏகே 61 படம் தீபாவளி ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் கார்த்தியின் விருமன் படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. கார்த்தியின் கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

விருமன் படத்தை தொடர்ந்து கார்த்தி சர்தார் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இதில் சர்தார் படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் சர்தார் படத்திற்கு போட்டியாக ஜெயம் ரவியின் இறைவன் படமும் தீபாவளி ரிலீசுக்கு தயாராக உள்ளதாம். சமீபகாலமாக ஜெயம்ரவியின் படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இப்படத்தின் மீது ஜெயம் ரவி முதல் நம்பிக்கை வைத்துள்ளார். டைரக்டர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் இறைவன் படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டது. சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யயுள்ளனர். ஏற்கனவே ஜெயம் ரவி, நயன்தாரா கூட்டணியில் வெளியான தனி ஒருவன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதனால் இறைவன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி படம் நேருக்கு நேர் மோதிக் கொள்வதால் எந்த படம் அதிக வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஜெயம் ரவி, கார்த்தி இருவருமே சேர்ந்து மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News